சனி பெயர்ச்சி பலன் 2025: நீங்க கடுமையான உழைப்பாளியா?.. ஏழரை சனி எதுவும் செய்யாது

மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்குதான் சனிபகவான் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே சனிபகவானின் பிடியில் தான் உள்ளது. எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. நம்மை திருத்தும் தெய்வம். இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நம்மை சாதிக்க செய்வது நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள்.

Aug 19, 2024 - 07:44
 0
சனி பெயர்ச்சி பலன் 2025: நீங்க கடுமையான உழைப்பாளியா?.. ஏழரை சனி எதுவும் செய்யாது
sani peyarchi palan 2025

சென்னை: sani peyarchi palan 2025: சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். இன்னும் சில வாரங்களில் வக்ர கதியில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். சனிபகவான் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஏழரை சனி மகர ராசிக்கு முடியும் அதே நேரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. இந்த சனி பெயர்ச்சியால் ஏதேனும் பாதிப்பு வருமோ என்று அச்சத்தில் இருக்கும் ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு. 

சனி பகவான் தரும் தண்டனை: 

சனிபகவான் நீதிமான். மனிதர்கள் செய்யும் தவறுக்கு சரியான தண்டனையை தருவார். அரசனை ஆண்டியாகவும் ஆண்டியை அரசனாகவும் மாற்றுவார்.மனிதர்கள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கஷ்ட படும் நேரத்தில் ஜாதகத்தை கையில் எடுப்பதற்கும் இவர்தான் காரணம். இவர் அரசனை மட்டும் இல்லை அனைத்து மனிதனையும் தண்டிப்பவர். இவரிடம் எந்த மந்திரியின் சிபாரிசும் எடுப்படாது. சிவனா இருந்தாலும் எமானாக இருந்தாலும் எவனாக இருந்தாலும் சனியின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. எல்லோருக்கும் ஒரே தீர்ப்புதான். 

தலைமை நீதிபதி சனிபகவான்:

மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்குதான் அதனால் இவரின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே இவரின் பிடியில் தான் உள்ளது. எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. நம்மை திருத்தும் தெய்வம். இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நம்மை சாதிக்க செய்வது நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள்.


சனி தரும் சந்தோஷம்:

சனி பகவான்  12 ராசிகளையும் சுற்றிவர  முப்பது ஆண்டுகள் ஆகிறது. எனவே  மனிதனுடைய வாழ்நாள் காலத்தில்  சனிபகவானுடைய பார்வையிலிருந்து யாரும்   தப்ப முடியாது என்பது மட்டும் உண்மை. ஆனாலும் அவரை வணங்கி வழிபடும் போது   அவர் மனமிறங்கி தன் பார்வையை தணித்துக் கொள்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.  தனக்கு உண்டான கடமையைச் செய்யும் ஒருவரை அந்தக் கடமையின் தன்மை எதுவாகயிருந்தாலும்,   சாஸ்திரங்கள் குறை கூறுவதில்லை. இந்தக் கருத்தையே  “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே”  என்று ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் வலியுறுத்துகிறார். 

ராஜயோக வாழ்க்கை:

சனிபகவான் உருவமும்,செயலும் சரியாக இல்லாவிட்டாலும் அவரை போல் ராஜ யோகத்தை கொடுப்பவர் யாரும் இல்லை. சனி எல்லாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார். ஒருவரின் லக்கினத்திற்கு சனி யோககாரராக இருந்து அவர் இருக்கும் இடமும் வலுவாக இருந்து அந்த திசா புத்தி மட்டும் வந்தால் போதும் குப்பையில் கிடந்தவரும் கோபுரத்தில் ஏறிவிடுவார்.

சனி பகவானுக்கு பிடித்தது:

எட்டாம் எண்ணை கண்டால் கெட்டது சனி என்று பயப்படுகிறார்கள் எட்டாம் எண்ணிற்குரியவர்கள்  கடின உழைப்பாளிகள். ஒவ்வொரு எண்ணும்,ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்தியத்தில் இருக்கும். 8ஆம் எண்ணுக்குறிய கிரகம் சனி.பொதுவாகவே சனியின் மீது யாருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. மற்றவரை திட்டுவதற்கு இவரை இழுக்காமல் இருக்கமாட்டார்கள். அதனால்தான் 8ஆம் எண் மேல் பெரும்பாலனவர்களுக்கு வெறுப்பு.

சனிபகவானும் எட்டாம் எண்ணும்

தசாவதாரங்களில் பகவான் கிருஷ்ணன் பிறந்த தினம் எட்டு. அஷ்டமி திதி எட்டாவது திதி திருமாலின் திருநாமம் (ஓம் நமோ நாராயணாய) என்பது எட்டெழுத்து. திருமாளின் மார்பில் வசிக்கும் செல்வத்தை குறிக்கும் லட்சுமி, அஷ்ட லட்சுமிகளாக இருந்து செல்வத்தை வாரி வழங்குகிறாள்.  திக்குகள் எட்டு. அஷ்ட திக் பாலகர்கள் அஷ்ட வசுக்கள், சிவஸ்வரூபங்கள் எட்டு என இப்படி எட்டுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கின்றன.

சனியால் வளம் பெறுபவர்கள்:

அறிவியல் மேதைகள்,விஞ்ஞானிகள்,ஆராய்ச்சியாளர்கள்,பிரபல இயக்குனர்கள் போன்றவர்கள் 8ஆம் எண் ஆதிக்கத்திலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். 8,17,26 போன்ற எட்டாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சனி யோகராகவே இருப்பார். இவர்கள் பெரும்பாலும் மன உறுதி படைத்தவர்களகவே இருப்பார்கள்.மேலும் எந்தவித காரியங்களையும் பொறுமையுடன் செய்வார்கள். மகர ராசி,மகர லக்கினம்,கும்ப ராசி,கும்ப லக்கினம்,ரிசப லக்கினம்,துலாம் லக்கின காரர்களும்,பூசம்,அனுசம்,உத்திராட்டாதி நட்சத்திர காரர்களும் சனி வலுவாக இருந்தால் 8ஆம் எண்ணை ராசியாக வைத்துகொண்டால் வாழ்வு வளம் பெரும் எதிர்பாராத உயர்வு இருக்கும்.

ஆயுள் ஸ்தானதிபதி:

ஜாதகத்தில் எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் சனீஸ்வரரை தவிர எந்த கிரகம் நின்றாலும் அந்த கிரகமும் பாதிப்புக்குண்டாகி ஆயுளுக்கும் பிரச்சனை ஏற்படுத்திவிடுவர். ஆனால் சனீஸ்வர பகவான் எட்டில் நின்றால் ஆயுளை கூட்டுவதோடு காரகோ பாவநாஸ்தி எனும் தோஷத்திருந்தும் விதிவிலக்கு பெருகிறார்.  

புகழ், செல்வம், செல்வாக்கு:

ஒருவர் தனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்று குருவிடம் வேண்டினால் அவர் சனியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார். சனி தனது ஆதிக்க காலமான இரண்டரை ஆண்டு காலத்தில் அவரை எவ்வளவு கடினமான உழைப்பை கொடுக்கமுடியுமோ கொடுத்து விடுவார். உழைப்பின் மறுபக்கம் வெற்றிதானே. இரண்டரை ஆண்டு உழைப்புக்கு பிறகு குரு பகவான் அவருக்கு தேவையான வெற்றி மற்றும் முன்னேற்றத்தை தந்து புகழின் உச்சத்தை எட்ட வைத்துவிடுவார். 

உழைப்பாளிகள் யார்:

sani peyarchi palan 2025 நிகழப்போகும் சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. கால புருஷ ராசியான மேஷத்திற்கு சனீஸ்வர பகவான் கர்மஸ்தானாதிபதியாகிறார். எனவே மேஷ ராசி மற்றும் லக்ன காரர்கள் பொதுவாகவே கடுமையான உழைப்பாளிகளாக விளங்குவர்.  துலா லக்னத்தில் சனி உச்சம் பெறுவதால் துலா ராசி மற்றும் லக்ன காரர்கள் எப்போதும் ஓடி ஓடி அடுத்தவர்களுக்காக உழைத்து உழைத்து ஓடாகும் ராசிகாரர்கள் ஆவர். 

நல்லவருக்கு நல்லவர் சனிபகவான்:

மகர கும்ப ராசிகளுக்கு சனீஸ்வர பகவான் அதிபதி ஆவதால் மகர கும்ப ராசி லக்ன காரர்கள் கடும் உழைப்பாளிகள். ஒருவர் ஜாதகத்தில் 10ல் சனி நின்றுவிட்டால் அவர்எள் உழைப்பால் முன்னேறிய உத்தமர்களாக இருப்பார்கள்.  ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவத்தில் சனி நின்றுவிட்டால் அவர்கள் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என உழைக்கும் வர்கமாக இருப்பார்கள்.  மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவதால் நிம்மதி பெருமூச்சு விடலாம். 

பயப்பட தேவையில்லை:

இந்த உலகத்தில் பேரும் புகழும் அடைந்த அத்தனை பேரின் ஜாதகத்திலும் சனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். சனி பகவானுக்கு தெரிந்ததெல்லாம் உழைப்புதான் உழைப்பவர்களைதான் சனீஸ்வரபகவானுக்கும் பிடிக்கும். கடுமையாக உழைப்பவர்கள் எல்லாம் சனி ஆதிக்கம் நிறைந்தவர்கள். கடின உழைப்பாளிகள் யாரும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்றவைகளால் பாதிக்கப்படுவதில்லை. சனி உழைப்பின் பிரியர் என்பதால் அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் உண்மை. எனவே நிகழப்போகும் சனி பெயர்ச்சியால் உழைப்பாளிகள் யாரும் பயப்படத் தேவையில்லை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow