NDA கூட்டணியில் இணையும் சம்பாய் சோரன்? .. டிவிட்டரில் ட்விஸ்ட் வைத்த முக்கியப் புள்ளி!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது அவரை வரவேற்று மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன். இவர் சோரன் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்தவர். ஹேமந்த சோரனின் தந்தை ஷிபு சோரனுக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு சம்பாய் சோரன் ஆற்றிய பணிகள் ஏராளம். ஜார்கண்டின் புலி என பரவலாக அழைக்கப்படும் சம்பாய் சோரன், ஷிபு சோரனுக்கு ஹனுமான் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறார். நில மோசடி வழக்கில் தனது முதல்வர் பதவியை ஜனவரி 31ம் தேதி ராஜினாமா செய்தார் ஹேமந்த் சோரன். இதனையடுத்து அவர் அமலாக்கத்தூறையால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால் தன்னுடைய தந்தைக்கு நெருங்கிய நண்பராக இருந்த சம்பாய் சோரன் பிப்ரவரி 2ம் தேதி முதல்வராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 28ம் தேதி ஹேமந்த சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் மீண்டும் ஜூலை 4ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் ஹேமந்த்.
இதனால், சம்பாய் சோரன் ஹேமந்த சோரன் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதேநேரம் சம்பாய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாவும், ஹேமந்த சோரன் கைதாகியிருந்த போது சம்பாய்-க்கும் அவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், பாஜகவில் அவர் இணைய இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இந்த தகவல்களை மறுத்தார் சம்பாய்.
இந்நிலையில், ஜார்க்கண்டில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சியின் 6 எம்.எல்.ஏக்களுடம் சம்பாய் சோரன் டெல்லிக்கு விசிட் அடித்தார். இதனால் சற்றே அடாங்கியிருந்த வதந்திகள் மீண்டும் பேசுபொருளாக மாறியது. டெல்லியில் சம்பாய் சோரன் பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து, அக்கட்சியில் இணைய இருப்பதாக பேசப்பட்டது.
இதனிடையே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் போஸ்டர்களில் இருந்து சம்பாய் சோரனின் புகைப்படங்கள் நீக்கப்பட்டன. இதனால், தற்போது கட்சியில் தான் அவமதிக்கப்பட்டதாக கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் சம்பாய் சோரன். மேலும், தனக்கு அனைத்து வழிகளும் திறந்தே இருக்கிறது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இப்படி முதிர்ச்சியான அரசியல் தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சிக்கே பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதன்மூலம், சம்பாய் சோரன் பாஜகவில் இணைவாரா அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணைவாரா என்ற பரபரப்பான சூழல் ஜார்க்கண்டில் நிலவி வருகிறது. இந்நிலையில், கட்சியில் இருந்து சம்பாய் விலகிய கையோடு, அவரை வரவேற்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை (எம்எஸ்எம்இ) அமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு தற்போது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரின் எக்ஸ் பதிவில், ”நீங்கள் ஜார்க்கண்டின் புலியாக இருந்துள்ளீர்கள், இனியும் இருப்பீர்கள். என்.டி.ஏ கூட்டணிக்கு உங்களை வரவேற்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
चंपाई दा आप टाईगर थें,टाईगर हैं और टाईगर ही रहेंगें।
NDA परिवार में आपका स्वागत है।
जोहार टाईगर…@ChampaiSoren — Jitan Ram Manjhi (@jitanrmanjhi) August 18, 2024
What's Your Reaction?