Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28 - அற்புதங்கள் இன்று யாருக்கு நிகழும்

Today Horoscope Predictions in Tamil: புதன் பகவானின் அருள் நிறைந்த புதன்கிழமையான இன்றைய தினம் சந்திரன் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 28, 2024 - 06:42
Aug 29, 2024 - 10:30
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28 - அற்புதங்கள் இன்று யாருக்கு நிகழும்
Today Rasi Palan 2024


Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 12ஆம் நாள் ஆகஸ்ட் 28ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி இரவு 01.20மணி வரை அதன் பின் ஏகாதசி திதி. மிருகஷீரிட நட்சத்திரம் பகல் 03.53 மணி வரை அதன் பின் திருவாதிரை நட்சத்திரம். புதன் பகவான் அருளினாலும் சந்திரன் பயணத்தாலும் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 


மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் உதவி கிடைக்கும். வராத கடன்கள் எதிர்பாராத வகையில் வசூலாகும். வியாபார சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு செலவிட நேரிடும். 

கடகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பழைய கடன்கள் குறையும்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள், விலகும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

கன்னி

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் உதவியுடன் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிலும் சற்று சிக்கனமுடன் இருப்பது நல்லது.

துலாம்

பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். திடீர் ஆன்மீக பயணம் செல்வீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அப்பா வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். 

விருச்சிகம்

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. 

தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் கல்வி விஷயமாக நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.

மகரம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow