தொட்டதெல்லாம் வெற்றியாகும்.. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி குடியிருக்கும் வெற்றிலை பரிகாரம்

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருக்கின்றனர் என்பது ஐதீகம்.முப்பெரும் தேவியர்கள் குடியிருக்கும் வெற்றிலையை வைத்து என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

Jul 12, 2024 - 16:05
Jul 12, 2024 - 17:11
 0
தொட்டதெல்லாம் வெற்றியாகும்.. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி குடியிருக்கும் வெற்றிலை பரிகாரம்
Betel Leaves In Hindus Puja

சென்னை: பண்டிகை, திருவிழா, வீட்டில் விஷேசம் என்றால் வெற்றிலை பாக்கு வைத்து உறவினர்களை அழைப்பது மரபு. இந்து கோவில்களில் கடவுளுக்கு எத்தனை பலகாரங்களை படைத்து வழிபட்டாலும்  வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும்.  12 ராசிக்காரர்களுக்கும் வெற்றிலையின் மூலம் பரிகாரம் செய்ய கவலைகள் தீரும் என்பது நம்பிக்கை.

தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. எனவேதான்  திருமண விழாக்களிலும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கும் வெற்றிலை கொடுத்து உடலுக்கு தேவையான சக்தியை கொடுத்துள்ளனர். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகும். 

துன்பங்கள் தீர்க்கும் அருமருந்தாகவும் வெற்றிலை திகழ்கிறது. வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வசிக்கின்றனர் என்பது ஐதீகம். மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், சிவனும், சுக்ரனும் கூட வெற்றிலையில் வாசம் செய்கின்றனர். எனவேதான் பூஜை மற்றும் திருமணம் சுபமாக நடக்க வேண்டும் என்பதற்காகவே வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. 


மேஷம் - ரிஷபம்

மேஷம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட செய்வினை கோளாறுகளினால் ஏற்படும் துன்பங்கள் விலகும். ரிஷபம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிபட வேண்டும். கண் திருஷ்டி பாதிப்புகள் நீங்கும். 

மிதுனம் - கடகம்

மிதுனம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை குல தெய்வத்தை கும்பிட்டால் வந்த வினையும், வருகின்ற வினையும் ஓடி விடும். கடகம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட கஷ்டங்கள் ஓடிவிடும். 

சிம்மம் - கன்னி

சிம்ம ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை குல தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரங்கள் தீரும். கன்னி ராசிக்காரர்கள், வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை குல தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

துலாம் - விருச்சிகம்

துலாம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கண் திருஷ்டி கோளாறுகள், துன்பங்கள் பறந்தோடும். விருச்சிகம் ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமையன்று வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து முருகப்பெருமானை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் துயரங்கள் நீங்கும்.

தனுசு - மகரம்

தனுசு ராசிக்காரர்கள் வெற்றிலையில் கல்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மகரம் ராசிக்காரர் சனிக்கிழமைகளில் வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து  காளிதேவியை வணங்கி சாப்பிட்டால் கவலைகள் பறந்தோடும்.

கும்பம் - மீனம்

கும்பம் ராசிக்காரர்கள் சனிக்கிழமை நாளில் வெற்றிலையில் நெய் வைத்து காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட வேண்டும். கவலைகளும், துன்பங்களும் தீரும். மீனம் ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வெற்றிலையில் சர்க்கரை வைத்து குல தெய்வத்தை வணங்கி சாப்பிட்டால் தீராத நோய்களும் தீர்ந்து விடும். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow