ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு "ஸ்கெட்ச்" போட்டது இவர்தான்.. போலீசார் அதிர்ச்சி தகவல்...
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும், பாஜகவிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றன.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், வழக்கறிஞர் அருள் தான் கொலையாளிகளுக்கு தகவல்களை அளித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை [05-07-24] இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இக்கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் முதற்கட்டமாக 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழியாக நடைபெற்றதாக கூறப்பட்டது. அதாவது ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்திற்கு பழிவாங்கும் படலமாக, ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக சுரேஷின் தம்பி புன்னை பாலா தெரிவித்து இருந்தார்.
ஆனாலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும், பாஜகவிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அருள் தான் குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பூந்தமல்லி மற்றும் திருவள்ளூர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் திமுகவைச் சேர்ந்த அருள், சில வழக்கறிஞர்கள், நண்பர்கள் மூலம் அருகிலேயே வைத்து ஆம்ஸ்டாராங்க் எங்கு செல்கிறார்? யாரையெல்லாம் சந்திக்கிறார்? எந்தெந்த நேரங்களில் எங்கு இருப்பார்? என்பதனை முழுமையாக திரைப்பட பாணியில் கண்காணித்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த சிலரை வைத்தே, அருள் கண்காணிப்பை நடத்தினாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்கள் போர்வையில் உடன் இருந்து நோட்மிட்டு அருளுக்கு தகவல்கள் பகிரப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அருள் தான் கொலைக்கான ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும், பொன்னை பாலு ஆட்கள் தான் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாகவும், போலீஸ் காவல் எடுக்கப்பட்டுள்ளதால் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலைக்கான ஆயுதங்களை வாங்கி கொடுத்ததும் அருள் தான் என்பதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கொலை சம்பவம் முடிந்த பிறகு ஆயுதங்களை அருளிடம் தான் பொன்னை பாலு கூட்டாளிகள் ஒப்படைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
போலீஸ் காவலில் அருளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் ஆயுதங்கள் எங்கு பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகியோர் வீட்டில் தான் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்து போலீசார் அதனை கைப்பற்றி உள்ளனர்.
மேலும் வழக்கறிஞர் அருள் மற்றொரு வழக்கறிஞர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இந்த படுபயங்கர கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் அருளிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
What's Your Reaction?