ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை.. வருமான வரி இல்லை! நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிப்பு

Nirmala Sitharaman New Tax Regime : வருமான வரி செலுத்துவோரில் 2இல் 2 பங்கு புதிய நடைமுறையை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்த அவர், வருமான வரி முறையை(Tax Rate Structure) மேலும் எளிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

Jul 23, 2024 - 13:09
Jul 23, 2024 - 13:16
 0
ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை.. வருமான வரி இல்லை! நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிப்பு
Nirmala Sitharaman New Tax Regime Tax Structure in Union Budget 2024

New Tax Regime Tax Rate Structure : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய விஷயங்களில் எதிர்பார்ப்பு நிலவினாலும், அனைவரும் மிகப் பெரியளவில் எதிர்நோக்கிக் காத்திருந்தது வருமான வரி தொடர்பான அறிவிப்பில் தான். இதில் புதிய வரி முறையில் இருப்போருக்கு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

வருமான வரி தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். வருமான வரி செலுத்துவோரில் 2இல் 2 பங்கு புதிய நடைமுறையை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்த அவர், வருமான வரி முறையை மேலும் எளிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கான வரி நடைமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு 3 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி இல்லை. 3 லட்சம் முதல் 7 லட்சம் என்றால் 5 சதவிகிதம்.. 7 லட்சம் முதல் 10 லட்சம் என்றால் 10%.. 10 லட்சம் முதல் 12 லட்சம் என்றால் 15%, 12 லட்சம் முதல் 15 லட்சம் என்றால் 20%, 15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் என்றால் 30% வரி செலுத்த வேண்டும்.

அதேபோல தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகை நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், ஏஞ்சல் வரி முறை முழுமையாக நீக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


ஆன்லைன் வர்த்தகத்திற்கான TDS குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் வரிக்கான அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக டிஜிட்டல்மயமாக்கப்படும்.தாமதமாக வரி செலுத்துவது இனி குற்றமாகாது. நேரடி வரி தகராறுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான Vivaad se Vishwas திட்டம் முன்னெடுக்கப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow