ஆந்திரா,பீகாருக்கு அள்ளிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்.. எத்தனை கோடி ஒதுக்கீடு தெரியுமா?

Union Budget 2024 : மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் அள்ளிக்கொடுத்துள்ளார். தென் மாநிலங்களுக்கு எந்த ஒரு முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை நிதியமைச்சர்.

Jul 23, 2024 - 12:34
Jul 23, 2024 - 13:03
 0
ஆந்திரா,பீகாருக்கு அள்ளிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்.. எத்தனை கோடி ஒதுக்கீடு தெரியுமா?
Nirmala Sitharaman Union Budget Session 2024

Union Budget 2024 : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக ஆந்திரா,பீகாருஙககு பல அறிவிப்புகள் இருந்தன. வளர்ச்சி பணிகளுக்காகச் சிறப்பு நிதி ஒதுக்கீடு தொடங்கிப் பல திட்டங்களை நிர்மலா சீதாராமன் ஆந்திராவிற்கும் பீகாருக்கும் அறிவித்தார்.


ஆந்திரா: லோக்சபா தேர்தலில் வென்று என்டிஏ கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலான நிலையில், அதைத் தொடர்ந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து தேவை எனக் கோரிக்கை விடுத்திருந்தது. 

சிறப்பு நிதி: இதற்கிடையே இன்றைய தினம், ஆந்திரா மாநிலத்துக்கு ஏராளமான சிறப்புத் திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். குறிப்பாக ஆந்திர தலைநகராக உருவாகும் அமராவதியை நிறுவக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.

பீகாருக்கான சிறப்பு அறிவிப்புகள்:


சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு

புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும்

உட்கட்டமைப்பை மேம்படுத்த, வங்கிகள் வழியாக நிதி வழங்கப்படும்

புதிய மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு   உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்

கயாவில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும்
பீகார் வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ. 11,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார் நிர்மலா சீதாராமன். 


வெள்ள தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எந்த விதமான சிறப்பான அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow