பணிபுரியும் பெண்களுக்காக நாடு முழுவதும் ஹாஸ்டல்.. மாஸ் அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன்

Women Hostel in Union Budget 2024 : ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Jul 23, 2024 - 11:54
Jul 23, 2024 - 12:41
 0
பணிபுரியும் பெண்களுக்காக நாடு முழுவதும் ஹாஸ்டல்.. மாஸ் அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன்
Nirmala sitaraman budget 2024

Women Hostel in Union Budget 2024 : பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் (தங்குமிடம்) அமைக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman) கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். 7வதுமுறையாக தொடர்ச்சியாக தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி, திறன் மேம்பாட்டிற்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய 4 வெவ்வேறு பிரிவினர் மீது கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு, அனைத்து முக்கிய பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைந்தபட்சம் 50% வழங்குவதாக அறிவித்தோம். பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடையும் வகையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். 

32 வயல் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் புதிய 109 அதிக மகசூல் மற்றும் காலநிலையைத் தாங்கும் ரகங்கள் விவசாயிகளின் சாகுபடிக்காக வெளியிடப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள் சான்றிதழ் மற்றும் முத்திரை மூலம் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள்.

வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்; வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட வேளாண் துறைக்கான நிதி அதிகரிப்பு

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி பயில ரூ. 10 லட்சம் வரை கல்வி  கடன் வழங்கப்படும். முதல் முறை வேலைக்கு சேருபவர்களை ஊக்குவிக்க இபிஎஃப்ஓ திட்டத்தின் கீழ் சிறப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்; கடுகு, நிலக்கடலை, சூரிய காந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டம். ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு. பீகாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. ஆந்திர தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த 15,000 கோடி நிதி ஒதுக்கீடு.

புதிதாக பணியில் சேருவோருக்கு அரசு ஒரு மாத ஊதியம் வழங்கும்; இதன்மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவர்.பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும். பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

சென்னை - விசாகப்பட்டினம் இடையே பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கும்  ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow