ஃபோட்டாவா வேணும் ஃபோட்டொ... பெண்ணின் கையை பதம் பார்த்த குதிரை!
Horse Bite Viral Video : ஆசையாக புகைப்படம் எடுக்கச் சென்ற சுற்றுலாப் பயணியை கடித்து விரட்டியடித்த அரசவை காவலாளியின் குதிரை காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Horse Bite Viral Video : ‘தி ஸ்மோக்’ என்று அழைக்கப்படும் லண்டனிற்கு உலகளவிலிருந்து ஆண்டிற்கு சுமார் 3 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு லண்டன் பிரிட்ஜ், பக்கிங்கம் அரண்மனை, தி பிரிட்டிஷ் மியூசியம், பிக் பென் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். அதில் குறிப்பாக அரசவை குதிரைகளுடன் செல்ஃபி எடுப்பதையும், புகைப்படம் எடுத்துக்கொள்வதையும் சுற்றுலாப் பயணிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், அரசவை காவலாளியின் குதிரை அருகே நின்று சுற்றுலாப் பயணி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயன்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக, குதிரை அப்பெண்ணின் கையை கடித்து இழுத்தது. இதில் வலி தாங்க முடியாமல் அப்பெண் அலறி துடித்துக்கொண்டு கூட்டத்திற்குள் ஓடினார். அவரை ஆசுவாசப்படுத்திய அவரது நண்பர்கள், கடிபட்ட இடத்தில் முதலுதவி செய்தனர். இருப்பினும் வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த அப்பெண்ணை மீட்ட காவலர்கள், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த காணொளியை கண்டு ட்ரிக்கர் ஆன சில சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில், “குதிரை அருகில் செல்ல வேண்டாம், தொட வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி சென்ற அந்த பெண்ணுக்கு இது தேவை தான்” என ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், “குதிரை அந்த பெண்ணுக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுத்து விட்டது”, “காயப்பட்ட பெண் விரைவில் குணமாக பிரார்த்தனைகள்” உள்ளிட்ட கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். ஒரே நாளில் மில்லியன் பார்வைகளைக் கடந்த இந்த காணொளிதான் தற்போது ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக இருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளிடம் அரசவை குதிரைகள் இப்படி ஆக்ரோஷமாக நடந்துகொள்வது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு இதே போல் 8 சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு இதே போல் ஒரு பெண் குதிரை அருகே புகைப்படம் எடுக்கச் சென்றபோது, கடுப்பான குதிரை அவரை எட்டி உதைத்துள்ளது. இதில் அப்பெண் தலைகுப்புற கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இப்படி தொடர்ச்சியாக சம்பவங்கள் நிகழ்ந்தும் சுற்றுலாப் பயணிகள் கொஞ்சம் கூட திருந்துவதில்லை என நெட்டிசன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?