கனடாவை ரூல் பண்ண போறதே நாங்கதான்.. வெளியான முக்கிய அறிவிப்பு
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக லிபரல் கட்சியின் தலைவரான சச்சித் மெஹ்ரா அறிவித்துள்ளார்.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரி 7-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பிரதமர் பதவியை விட்டு விலகுவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி (Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அக்கட்சியின் தலைவரான சச்சித் மெஹ்ரா அறிவித்துள்ளார்.
யார் இந்த மார்க் கார்னி?
மார்க் கார்னி 2008 முதல் 2013-ஆம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018-ஆம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக நாட்டு மக்கள் அவரை அங்கீகரிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வாக்காளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:
மார்க் கார்னி (Mark Carney) - 131,674 வாக்குகள்
கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) - 11,134 வாக்குகள்
கரினா கோல்ட் (Karina Gould )- 4,785 வாக்குகள்
ஃபிராங்க் பேலிஸ்(Frank Baylis) - 4,038 வாக்குகள்
மார்க் கார்னி பெற்ற 131,674 வாக்குகள் மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவிகித வாக்குகளாகும். இந்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் கார்னி பதவியேற்க உள்ளார்.
சமீபகாலமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மாணவர்கள் விசாக்கள் குறித்து கனடா எடுத்த முடிவால் இந்திய மாணவர்களுக்கு சிக்கல் அதிகரித்தது. இதனால் இந்தியா-கனடா இடையிலான உறவு மோசமடைந்தது. தற்போது புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ள நிலையில் இவர் இந்தியா-கனடா உறவை எப்படி கையாள்வார் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?






