ஊழல் சாம்ராஜ்யங்களை ஒழித்து விட்டோம்.. 3வது முறையாக ஆட்சி.. மோடி பெருமிதம்

மக்களவையில் இன்று பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பதிலுரையாற்றினார். ஏழைகளின் நலனுக்காக நாங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு மூன்றாவது முறையாக அங்கீகாரம் அளித்துள்ளனர். மக்களவையில் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்கட்சியினர் பிதற்றுவது கண்கூடாத தெரிகிறது என்றார்.

Jul 2, 2024 - 17:12
Jul 3, 2024 - 12:38
 0
ஊழல் சாம்ராஜ்யங்களை ஒழித்து விட்டோம்.. 3வது முறையாக ஆட்சி.. மோடி பெருமிதம்
PM Modi speech in Lok Sabha Session 2024

பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே எதிர்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கையை முற்றுகையிட்டு எதிர்கட்சியினர் மணிப்பூர் மணிப்பூர் என குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அனைவரும் அவரவர் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டா. கூச்சல் குழப்பத்திற்கு இடையே பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சியினருக்கு கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டினார்.

2014ஆம் ஆண்டிற்கு முன்பு நாட்டில் அதிகமான அளவிற்கு தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு தீவிரவாதிகளை அவர்களின் இடங்களுக்கே சென்று நாம் தாக்கியுள்ளோம். பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளோம். 2014ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ஊழல் முறைகேடுகள் அதிகம் நடைபெற்றன.கடந்த 10ஆண்டுகளில் ஊழல் சாம்ராஜ்யங்கள் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டன. 

"ஒரு காலத்தில் நிறைய மோசடிகள் நடந்தன. 2014க்குப் பிறகு கொள்கைகள் மாறி, வேலையின் வேகம் மாறியது. டிஜிட்டல் பணபரிவர்த்தனை, போன் பேங்கிங் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.  இன்று இந்தியாவின் வங்கிகள் அதிக லாபம் ஈட்டுகின்றன.உண்மையான மதசார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்து விட்டது.2047ஆம் ஆண்டை மனதில் வைத்து நாம் இப்போது திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார். 

அரசியல் சாசனத்தை கொண்டாடுபவர்கள் அதை ஜம்மு காஷ்மீரில் பயன்படுத்த முடியாது, சட்டப்பிரிவு 370 மக்களின் உரிமைகளை பறித்துள்ளது.பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்தனர். 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு கல் வீச்சு முடிந்துவிட்டது. மக்கள் இந்திய அரசியலமைப்பு, கொடி மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow