விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆர்டர்.. குஷியான சீமான்

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாமகவினருக்கு வாக்களிக்க கூடாது என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம். கட்சி மாவட்ட, கிளை செயலாளர்களை போனில் அழைத்து அதிமுக வாக்கு பாமகவிற்கு செல்ல கூடாது என்று உத்தரவிட்டு உள்ளாராம்.

Jul 2, 2024 - 16:50
Jul 2, 2024 - 16:52
 0
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆர்டர்.. குஷியான சீமான்
Edappadi Palanisamy vs PMK

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெரும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடைபெரும் எனவும்  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடலநலக் குறைவால் காலமான நிலையில் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஜூன் 26ஆம் தேதியன்று 29 பேர்களில் யாரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற விருப்பம் தெரிவிக்கவில்லை.

மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க பாமகவும் நாம் தமிழர் கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில் அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி நேரடியாகவே கோரிக்கை வைத்துள்ளது. அதிமுகவினர் நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் பகிரங்கமாக ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று  தேர்தல் பிரசாரத்தின் போது பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக விழுப்புரம் மாவட்ட, கிளை செயலாளர்களை போனில் அழைத்து அதிமுக வாக்கு பாமகவிற்கு செல்ல கூடாது என்று உத்தரவிட்டு உள்ளாராம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவது 2026ல் பாமகவின் சீட் பேரத்திற்கு வலுசேர்க்கும். அவர்கள் 2026ல் நம்முடன் வந்தால் அதிக சீட் கேட்பார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது. பாமகவின் அரசியல் எழுச்சிக்கு அதிமுக உதவிடக்கூடாது என கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மறைமுகமாக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறாமல் கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow