சென்னையில் தீ எறிந்தபடி சாலையில் ஓடிய அரசு AC பேருந்து… உள்ளே இருந்த பயணிகளுக்கு என்னாச்சு..?

சென்னையில் மாநகர அரசுப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jul 2, 2024 - 16:20
Jul 2, 2024 - 16:49
 0
சென்னையில் தீ எறிந்தபடி சாலையில் ஓடிய அரசு AC பேருந்து… உள்ளே இருந்த பயணிகளுக்கு என்னாச்சு..?
TN Govt AC Bus Fire Accident in Chennai

சென்னை: பிராட்வே முதல் சிறுசேரி வரை தடம் எண் 109 சி பேருந்து இயக்கப்படுகிறது. சென்னையின் மிக முக்கியமான வழித்தடமான இந்த ரூட்டில் செல்லும் பேருந்துகளில் மக்கள் அதிகளவில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பகல் பிராட்வே பேருந்து முனையத்தில் இருந்து சிறுசேரிக்கு 109 சி பேருந்து இயக்கப்பட்டது. ஏசி பஸ்ஸான இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாநகர ஏசி பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எந்தப் பகுதியில் இருந்து தீ பரவியது என தெரியவரும் முன்பே, தீ மளமளவென கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் செய்வதறியாது திகைத்த ஓட்டுநர், பேருந்தை சாலையின் ஓரமாக அப்படியே நிறுத்திவிட்டார். இதனையடுத்து அந்த பேருந்தில் பயணித்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேறி உயிர் தப்பினர். கொஞ்சம் தாமத்திருந்தாலும் பேருந்தில் பயணித்தவர்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றளவிற்கு தீ கொளுந்துவிட்டு எறிந்தது.  

அதேபோல், சாலையில் தீ எறிந்தபடி அரசுப் பேருந்து ஓடுவதை பார்த்து பொதுமக்களும் அந்தப் பகுதியில் இருந்து அலறியடித்து ஓடினர். அந்நேரம் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் துரிதமாக செயல்பட்டு, பேருந்து அருகே மக்கள் செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுத்தனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது, நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்கொள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் அரசுப் பேருந்து முற்றிலும் எறிந்து சேதமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அரசுப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட காரணம் என்ன என்பது பற்றி போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்துகளை முறையாக பரமாரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். அரசுப் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அடையாறு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதேபோல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பிவிடப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow