வரலட்சுமி மெஹந்தி நிகழ்ச்சியில் ரவுடி பேபியாக மாறிய ராதிகா… சம்பவம் செய்த சரத்குமார்!

வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் சச்தேவுக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ராதிகா சரத்குமார் ரவுடி பேபியாக மாறிய சம்பவம் வைரலாகி வருகிறது.

Jul 2, 2024 - 21:10
Jul 2, 2024 - 22:21
 0
வரலட்சுமி மெஹந்தி நிகழ்ச்சியில் ரவுடி பேபியாக மாறிய ராதிகா… சம்பவம் செய்த சரத்குமார்!
Varalaxmi Sarathkumar Mehandi Function

சென்னை: கோலிவுட், டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் வரலக்ஷ்மி சரத்குமார். இவரது திருமணம் இன்று மாலத்தீவில் நடைபெறுகிறது. வரலக்ஷ்மி, தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் இருவரின் திருமணத்திற்காக ஏராளமான சினிமா பிரபலங்கள் மாலத்தீவு சென்றுள்ளனர். அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, ராதிகா ரவுடி பேபியாக மாறிய சம்பவமும் இணையத்தை கலங்கடித்து வருகிறது. சரத்குமார் தனது முதல் மனைவி சாயாவை விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சரத்குமார் – சாயா இருவருக்கும் பிறந்தவர் தான் வரலக்ஷ்மி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வரலட்சுமியின் திருமணத்தில் சரத்குமாரும் ராதிகாவும் ஜோடியாகவே பங்கேற்றுள்ளனர். ரஜினி உள்ளிட்ட பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சரத்குமார், வரலட்சுமி ஆகியோருடன் ராதிகாவும் சென்று வந்தார். அதேபோல், வரலட்சுமியின் திருமண நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று செம்ம வைப் கொடுத்துள்ளார் ராதிகா. திருமணத்திற்கு ஒருநாள் முன்னதாக மாலத்தீவில் நடைபெற்ற மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டமும் களைக் கட்டியது. அப்போது சரத்குமாரும் ராதிகாவும் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடி மஜா செய்தனர்.

ராதிகா ரவுடி பேபியாக மாற, அவருக்கு சூப்பராக கம்பெனி கொடுத்தார் சரத்குமார். இருவரும் ஆடியதை பார்த்து திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் கூஸ்பம்ஸ் ஆக, அந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. சரத்குமார், ராதிகா ஜோடி பல படங்களில் ஜோடி சேர்ந்து டூயட் பாடல்களுக்கு ஆடியுள்ளனர். ஆனால் அதனையெல்லாம் விட ரியலாக டான்ஸ் ஆடி பட்டையை கிளப்ப, கல்யாண வீடே அல்லோலப்பட்டு வருகிறது. வரலட்சுமி திருமணம் செய்துகொள்ள போகும் நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாலத்தீவில் நடைபெறும் திருமணத்தை தொடர்ந்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow