அரசியலுக்கு வரும் விஜய்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? - திருநாவுக்கரசர் சொன்ன சூசக பதில்

அரசியலிலும் சினிமாவிலும் கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி இருக்கும் என்ற நிலை இருப்பதால் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதால் அவருக்கு யாரும் அறிவுரை சொல்ல தேவையில்லை. நன்றாக சிந்தித்து தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளதாக கருதுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Sep 6, 2024 - 17:46
Sep 7, 2024 - 10:08
 0
அரசியலுக்கு வரும் விஜய்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? - திருநாவுக்கரசர் சொன்ன சூசக பதில்
tirunavukarasar press meet pudukottai

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வரலாறு உள்ளது. கட்சி தொடங்கிய பலர் வென்றதாக சரித்திரம் இல்லை தோற்றதாகவும் சரித்திரம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுகரசர் கூறியுள்ளார். அரசியலில் யாரும் எளிதாக வெற்றி பெற முடியாது அதற்காக அவர்களை வரக்கூடாது என்று சொல்லவும் முடியாது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர்,
தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். அவரது பயணம் வெற்றிகரமாக வெற்றியடையும் என்று வாழ்த்துகிறேன்.

திமுக பாஜக காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் ஆகியவை கட்சி தொடங்கி ஒரு வருஷம் இரண்டு வருஷம் அல்ல பல வருடங்கள் ஆகிறது. எனவே புதிதாக கட்சி தொடங்கியவர்களை பார்த்து திமுக உட்பட அனைத்து கட்சிகளும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.யாரும் பயப்படவும் இல்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வரலாறு உள்ளது. கட்சி தொடங்கிய பலர் வென்றதாக சரித்திரம் இல்லை தோற்றதாகவும் சரித்திரம் இல்லை. 
அவருடைய கொள்கை கோட்பாடுகள் பொதுமக்கள் செல்வாக்கு அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது பொறுத்துதான் அது எவ்வாறு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதை பொறுத்துதான் வெற்றி பெறுவது தோல்வி அடைவதும் இருக்கும்.அரசியலில் யாரும் எளிதாக வெற்றி பெற முடியாது அதற்காக அவர்களை வரக்கூடாது என்று சொல்லவும் முடியாது.

சமீப காலமாக இந்தியாவில் கூட்டணி ஆட்சி முறை என்பது அதிகரித்து வருகிறது குறிப்பாக தனித்து ஆட்சி செய்த மோடியை தற்போது கூட்டணி ஆட்சி தான் நடத்தி வருகிறார் அது போன்று இந்தியாவின் பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி முறை என்பது நடைமுறையில் உள்ளது.இதற்காக 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரும் என்று கூற முடியாது.ஒவ்வொரு கட்சிகளும் வெற்றி பெற்று அவர்கள் வாங்கக்கூடிய சீட்டைப் பொறுத்து தான் அது அமையும்.

ஒரு கட்சி அடுத்து பெரும்பான்மை பெற்றிருந்தாலும் கூட்டணி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துவது என்பது கட்டாயம் கிடையாது அது இறுதி பெரும்பான்மை பெற்று இருந்தால் அவர்களை ஆட்சி அமைப்பார்கள்.

முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அவ்வாறு தான் செய்வார் விமர்சனம் தான் அவர் செய்வார்.அந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு எவ்வளவு முதலீடு வந்துள்ளது கொண்டு வந்த முதலீட்டால் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது. என்பது குறித்து அறிக்கையை அவர் வெளியிடுவது தமிழக அரசின் கடமை.

பாஜக அரசிடமிருந்து மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது அவர்கள் ஆர் எஸ் எஸ் பாஜக சித்தாந்தத்தை விட்டு என்றைக்கும் விலக மாட்டார்கள். தற்போது சில விஷயங்களை பாஜக செய்ய முடியாததற்கு காரணம் அவர்கள் உள்ள கூட்டணி கட்சியினால் தான்  நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பாஜக கூறும் அனைத்திற்கும் சரி என்று கூற மாட்டார்கள். பாஜக நினைப்பதெல்லாம் நிறைவேற்றுவதற்கு இருவரும் விட மாட்டார்கள்.பேலன்ஸ் செய்து தான் மோடி இந்த அரசை நகர்த்த முடியும்.

இந்தியாவிலிருந்து அரசியல் படிப்பு படிப்பதற்காக அண்ணாமலை சென்றுள்ளார் அவர் நன்றாக அரசியல் குறித்து படித்து ஒரு நல்ல அரசியல்வாதியாக வருவதற்கு வாழ்த்துக்கள் அவர் லண்டன் சென்றிருப்பதால் கட்சியை தற்காலிகமாக நிர்வகிக்க ஹெச்.ராஜா தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது என்பது வழக்கமான ஒன்றுதான் தலைவர் இல்லாதபோது கட்சியை நிர்வகிப்பதற்கு இது தேவைதான் இதுகுறித்து விமர்சனம் செய்ய தேவையில்லை இதேபோன்று படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள அண்ணாமலை சென்றுள்ள விவகாரம் குறித்தும் விமர்சனம் செய்ய தேவையில்லை.

சினிமாவிற்குள் அரசியல் உள்ளது வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் சினிமா துறையிலும் அரசியல் துறையிலும் கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னிவெடி இருக்கும் துறை எனவே சினிமா துறையில் இருந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் அவர் நன்றாக சிந்தித்து தான் வந்திருப்பார் அவருக்கு அறிவுரை கூற யாரும் தேவையில்லை.அவர் அரசியலுக்கு வரட்டும் அவரது கருத்துக்களை கூறட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் திருநாவுக்கரசர். 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. விஜய் அரசியலுக்கு வரப்போவது பல அரசியல் கட்சியினனரை கருத்து கூற வைத்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் யாரெல்லாம் விஜய் உடன் கூட்டணி வைக்கலாம் என இப்போதே துண்டு போட ஆரம்பித்து விட்டனர். சட்டசபை தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடுவாரா? கூட்டணி சேருவாரா? தனது முதல் மாநாட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow