சீனியர்ஸ் Rocked.. எடப்பாடி Shocked... சுக்கு நூறாக நொறுங்கிய EPS கனவு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவெடுத்தால், அக்கட்சியின் சீனியர்கள் வேறு முடிவு எடுத்து வருவது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் கட்சி மிகவும் பலமாக இருக்க வேண்டும் என அதிமுக தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, தற்போது அதிமுகவை பலப்படுத்தும் பணிகளை அக்கட்சியின் தலைவர்களும் நிர்வாகிகளும் தொடங்கிவிட்டனர். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவெடுத்தால், அக்கட்சியின் சீனியர்கள் வேறு முடிவு எடுத்து வருவது தான் எம்.ஜி.ஆர் மாளிகையின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடக்கவிருந்த அதிமுக மா.செக்கள் கூட்டத்தில். சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடியிடம் வலியுறுத்த திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால், இதனையறிந்த பின்னர் தான், எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாசெக்களின் வாயை அடைக்க, செயற்குழு கூட்டத்தில், சசிகலா, ஓபிஎஸை இணைப்பது என்பது முடியவே முடியாது என்ற தீர்மானத்தை கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருந்ததாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அதோடு தனக்கு சாதகமாக 12 தீர்மானங்களை தீட்டி செயற்குழுவிடம் எடப்பாடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தை அறிந்துகொண்ட வட மற்றும் டெல்டா மாவட்ட மாஜிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும், தங்களை மீறி தீர்மானத்தை கொண்டுவந்தால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நிறைவேற்றவிடாமல் செய்துவிடுவதாகவும் எடப்பாடியை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
எப்படி 2020 ஜூன் 22 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் செல்லாது என்று அறிவித்தோமோ, அதேபோல் செயற்குழுவிலும் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான வேலைகளை பார்ப்போம் என்று எடப்பாடியிடம் அழுத்தம் திருத்தமாக மாஜிக்கள் கூறிவிட்டார்களாம். இதனால் வேறு வழியே இல்லாமல் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் தொடர்பான தீர்மானத்தை எடப்பாடி கைவிட்டதாகவும், ஆகஸ்ட் 16 தேதி செயற்குழு கூடுவதற்குமுன் நிறைவேற்றப்படவுள்ள தீர்மான நகல்களை சீனியர்கள் ஒன்றுக்கு பத்துமுறை அலசி ஆராய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரசாந்த் கிஷோர் போன்று அரசியல் ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும், எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகியின் 100வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் போன்ற முக்கிய அம்சங்கள் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி கட்சி தன் கட்டுக்குள் வந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்க, கட்சியில் செயற்குழுவை மீறி ஒன்றுமில்லை என்பதை செயற்குழு உறுப்பினர்கள் நிரூபித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் கட்சி எடப்பாடி கட்டுப்பாட்டில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்கிறனர் அரசியல் விமர்சகர்கள்.
இப்படியான ஒரு சூழலில், கட்சி அதிகாரத்தை கைபற்ற செயற்குழு சொல்வதை கேட்பாரா? அப்படி செயற்குழு சொல்வதை எடப்பாடி கேட்டால், கட்சியில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் இணைவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்
What's Your Reaction?






