GOAT: “அண்ணே வரார் வழி விடு..” விஜய்யின் கோட் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட் இதோ!

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் சென்சார், ரன்னிங் டைம் குறித்த அபிஸியல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Aug 21, 2024 - 17:53
Aug 22, 2024 - 10:07
 0
GOAT: “அண்ணே வரார் வழி விடு..” விஜய்யின் கோட் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட் இதோ!
விஜய்யின் கோட் சென்சார் அப்டேட்

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோவை தொடர்ந்து விஜய் நடிப்பில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவாகியுள்ளது கோட். இப்படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை, கடந்த வாரம் வெளியான ட்ரைலர் இன்னும் எகிற வைத்துள்ளது. 

ஆக்ஷன், பேமிலி சென்டிமெண்ட், எமோஷனல், நட்பு என பக்கா கமர்சியல் மூவியாக உருவாகியுள்ள கோட் விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், விஜய்யை டி-ஏஜிங் கெட்டப்பில் இளமையாக பார்க்கவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோட் படத்தின் சென்சார், ரன்னிங் டைம் குறித்த அப்டேட்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சென்சாரில் கோட் படத்திற்கு யு/ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த அப்டேட்டுடன் விஜய்யின் மெர்சலான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், பாட்ஷா ரஜினி ஸ்டைலில் கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கும் விஜய், கையில் துப்பாக்கியுடன் மாஸ் காட்டுகிறார். ஒருபக்கம் தவெக கொடி அறிமுகம், இன்னொரு பக்கம் கோட் சென்சார் அப்டேட், புதிய போஸ்டர் என விஜய் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகமாக அமைந்துள்ளது. இதனிடையே கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியோர் நடிக்க கமிட்டான போது, விஜய் கொடுத்த ரியாக்ஷன் என்னவென்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். 

மேலும் படிக்க - நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்

அதாவது "விஜய்யிடம் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியோரும் கோட் படத்தில் இருக்காங்கன்னு சொன்னேன். உடனே அவர், ‘யோவ், என்னய்யா பண்ணுற? வேணாம்யா... இவ்வளவு பேரை வச்சுட்டுப் படம் எடுத்துருவியா' எனக் கேட்டாராம். அதேபோல், ‘அவரெல்லாம் நாங்க வரும்போது பெரிய ஸ்டார்யா’என பிரசாந்தை புகழ்ந்துள்ளார் விஜய். இதனையடுத்து, ‘பிரசாந்துக்கு உங்ககூட நடிக்கிற சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், அவங்க கேரக்டர்ஸ் நல்லா இல்லாம நடிக்க ஓகே சொல்வாங்களா பிரதர்'ன்னு சொல்லி விஜய்யை சமாதானப்படுத்தினேன்" என வெங்கட் பிரபு கூறியுள்ளார். 

முன்னதாக விஜய்யின் கோட், மங்காத்தா படத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என அஜித் கூறியிருந்ததை வெங்கட் பிரபு ஷேர் செய்திருந்தார். மேலும் அஜித் சொன்னபடி கோட் படத்தை இயக்கியுள்ளதாகவும், ரசிகர்கள் தான் அதன் ரிசல்ட்டை சொல்ல வேண்டும் எனவும் கூறியிருந்தார். கோட் ட்ரைலர், சென்சார் சர்டிபிகேட், ரன்னிங் டைம் பற்றிய அப்டேட் வெளியாகிவிட்ட நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இதுவரை எதுவும் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow