மத்திய அரசின் புதிய அமைச்சரவை குழுக்கள்.. எந்த குழுவில் யார் யார்? - முழு விபரம்

டெல்லி: பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் நாட்டின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைச்சரவை குழுக்களை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக, இந்த குழுவில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை சேர்ந்தவர்கள் அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.

Jul 4, 2024 - 10:18
 0
மத்திய அரசின் புதிய அமைச்சரவை குழுக்கள்.. எந்த குழுவில் யார் யார்? - முழு விபரம்
Modi cabinet committee

ஒரு சில விவகாரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் சம்பந்தப்படும் போது, அமைச்சரவை குழு கூடி முடிவுகளை எடுக்கவேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் சட்டம் கூறுகிறது. இதற்காக பிரதமர் அமைச்சரவை குழுக்களை அமைப்பது வழக்கம். 


முந்தைய ஆண்டுகளைப் போலவே, அமைச்சரவையின் நியமனக் குழுவில் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா,பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயர் நியமனங்கள் மற்றும் தங்குமிடங்களைத் தவிர அனைத்து அமைச்சரவைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளது. 

அமைச்சரவைக் குழுக்களில் பாஜக மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியில் உள்ள ஜனதா தளம் (ஐக்கிய), தெலுங்கு தேசம் கட்சி, சிவசேனா, ஜனதா தளம் (எஸ்), மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் மத்திய அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் எச்.டி.குமாரசாமி மற்றும் விவசாய அமைச்சர் சிவராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வள அமைச்சர் மற்றும் ஜே.டி.(யு) தலைவர் லாலன் சிங் என்ற ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  

பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில்,பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், ஷா, கட்கரி, சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரைத் தவிர, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு,  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜிதன் ராம் மஞ்சி, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு, துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி, சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், நிலக்கரி அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் புதிய உறுப்பினர்களாக தெலுங்குதேசம் கட்சியின் நாயுடு மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஜி ஆகியோர் உள்ளனர். அவர்களோடு ராஜ்நாத் சிங், அமித் ஷா, சீதாராமன், நட்டா,  ரிஜிஜு, ராஜீவ் ரஞ்சன் சிங், சமூக நீதி அமைச்சர் வீரேந்திர குமார், ஜல் சக்தி அமைச்சர் சிஆர் பாட்டீல், பழங்குடியினர் விவகார அமைச்சர் ஜுவல் ஓரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மத்திய சட்டத்துறை இணையமைச்சர் (சுயேச்சைப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் சட்டத்துறை இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளனர்.

முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், கட்கரி, சீதாராமன், கோயல், ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங், நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சர் சிராக் பாஸ்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.. இந்தக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக புள்ளியியல் துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் ஆயுஷ் அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தங்குமிடத்திற்கான அமைச்சரவைக் குழுவில் அமித் ஷா, நிதின் கட்கரி, சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் உள்ளனர். இந்த குழுவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லாலும் உறுப்பினராக உள்ளார். மத்திய பணியாளர் மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த குழுவில் சிறப்பு அழைப்பாளராக உள்ளார்.

திறன், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர், அமித் ஷா, ராஜ்நாத் சிங், சீதாராமன், கட்கரி, பிரதான், வைஷ்ணவ், யாதவ், பூரி, வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow