அஷ்யூரன்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.. சிகாகோவில் ஸ்டாலின் கையெழுத்து

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் உலகளாவிய திறன் மையம் சிகாகோவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Sep 4, 2024 - 10:41
Sep 4, 2024 - 16:29
 0
அஷ்யூரன்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.. சிகாகோவில் ஸ்டாலின் கையெழுத்து
mou was signed in assurant cm mk stalin in chicago usa

தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அமெரிக்காவிற்கு 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இப்பயணத்தின் போது, முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும் அங்குள்ள தமிழர்களும் முதலமைச்சரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து 3.9.2024 அன்று  சிகாகோ நகரில் அஷ்யூரன்ட் நிறுவனத்துடன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், அஷ்யூரண்ட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, அஷ்யூரண்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அஷ்யூரன்ட் நிறுவனம் (Assurant, Inc.) பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனம் அட்லாண்டாவை தலைமையிடமாக கொண்டு இடர் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. சொத்து, விபத்து, நீட்டிக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு போன்ற பலவிதமான சிறப்பு மற்றும் முக்கிய சந்தை காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow