சிகாகோவில் சைக்கிளில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மின்மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Sep 4, 2024 - 10:24
Sep 4, 2024 - 16:29
 0
சிகாகோவில் சைக்கிளில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
mk stalin mou chicago

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும் அங்குள்ள தமிழர்களும் முதலமைச்சரை வரவேற்றனர்.

சான் பிரான்ஸிக்கோ சென்ற முதல்வருக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிற்பான வரவேற்பளித்திருந்தனர். பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு முதலீட்டாளர்கள், முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்படி, ஈல்டு என்ஜினியரிங், மைக்ரோ சிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் தொழில் மையங்களை அமைக்க உள்ளன.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம், வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து உடற்பயிற்சியை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிகாகோ நகரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் பயணம் செய்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதனிடையே மின்மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் சிகாகோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow