காந்த கண்ணழகி.. கண்களைச் சுற்றி கருவளையமா?.. இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உள்ளத்தை வெளிக்காட்டும் கண்களைச்சுற்றி கருவளையம் இருந்தாலே பார்க்க கஷ்டமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கருவளையம் போக்கலாம்.

Sep 4, 2024 - 09:57
Sep 4, 2024 - 16:29
 0
காந்த கண்ணழகி.. கண்களைச் சுற்றி கருவளையமா?.. இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
eyes dark circles how to removes with home remedies

சருமத்தை அழகாக்க மேக்கப் சாதனங்கள் உதவும் ஆனால் களையிழந்த கண்களுக்கு என்ன மேக்கப் போட்டாலும் உரிய பராமரிப்பின்றி உயிர்ப்பை பெற முடியாது. கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்கி காந்த கண்களைப் பெற வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். தினந்தோறும் உடலை பராமரிப்பது போலவே கண்களுக்கு சில நிமிடங்கள் செலவு செய்யுங்கள் பொலிவான கண்களை எளிதாக பெறலாம். அப்புறம் உங்க கண்களைப் பார்த்து காந்த கண்ணழகி என்று பாடுவார்கள். 

கறிவேப்பிலை சாறு:

வேலைக்காக வீட்டை விட்டு வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. முகத்தை கழுவிவிட்டு வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.  கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.

கண்களுக்கு புத்துணர்ச்சி:

வீட்டை விட்டு வெளியே சென்று வந்தாலே தூசிகள் பட்டு கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? ஒரு கிண்ணத்தில் நிறைய தண்ணீர் எடுத்துகொண்டு கண்களை மட்டும் அந்த கிண்ணத்தில் மூழ்க வைத்து அலச வேண்டும் சின்னச் சின்ன தூசிகள் இருந்தாலும் வெளியேறி கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்று பளிச்சிடும். 

ஆரஞ்ச் பழ ஜூஸ்:

தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃப்ரீசரில் வைத்து அது ஐஸ் கட்டியாக ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் என ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.

சோர்வான கண்கள்

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என கண்கள் வேலை செய்து கொண்டே இருப்பதால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கமும் ஏற்படுத்துகின்றன. நன்றாக தூங்கி எழுந்து கண்களுக்கு ஓய்வு கொடுத்தாலே புத்துணர்ச்சி கிடைக்கும்.

 

கண்களுக்கு மசாஜ் செய்யுங்கள்:

கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தினசரியும் 10 நிமிடங்களாவது கண்களுக்கு நன்றாக மசாஜ் செய்ய செய்தால் கண்களில் ஏற்படும் அழுத்தங்கள், சோர்வு ஆகியவை குறைந்து கண்கள் பளிச்சென்று தெரியும். புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அப்புறம் உங்க கண்களைப்பார்த்து காந்த கண்ணழகி என்று பாடினாலும் ஆச்சரியமில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow