Parliament : ஒருபக்கம் ஒழுகும் மழை நீர்.. குதித்துவிளையாடும் குரங்கு.. புது நாடாளுமன்ற கட்டடத்தில்தான்!

Monkey Inside Parliament New Building : புதிய நாடாளுமன்ற கட்டத்தில் ஒரு பக்கம் மழை நீர் ஒழுகிய நிலையில் இப்போது குரங்கு ஒன்று குதித்து விளையாடுகிறது. நாடாளுமன்ற லாபியில் ஜாலியாக உலா வரும் குரங்கு வீடியோ சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது.

Aug 3, 2024 - 10:36
Aug 3, 2024 - 15:05
 0
Parliament : ஒருபக்கம் ஒழுகும் மழை நீர்.. குதித்துவிளையாடும் குரங்கு.. புது நாடாளுமன்ற கட்டடத்தில்தான்!
Monkey Inside Parliament New Building

Monkey Inside Parliament New Building : புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் குரங்கு புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் நாற்காலியில் அமர்ந்து சாவகாசமாக சுற்றும் குரங்கு ராஜா போல கம்பீரமாக உலா வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர் விவாதத்தின் போது காரசாரமான விவாதங்கள், கருத்து மோதல்கள்.. வெளிநடப்புகள் நடைபெறும். பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெறும். இந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை காண அவ்வப்போது குரங்குகளும் வந்து போகும். குரங்குகளின் சேட்டைகளால் சில நேரங்களில் நாடாளுமன்ற நிகழ்வுகளே கூட நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. 


நாடாளுமன்ற வளகத்தினுள் வரும் குரங்குகளை விரட்ட லங்கூர் குரங்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் லங்கூர் குரங்குகளின் பனிக்காலம் முடிவடைந்து, அதன் சேவைகள் வேண்டாம் என கூறி கடந்த 2016ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் அதன் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் நூலக அறையினுள் நுழைந்த குரங்கு ஒன்று, அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் விழி பிதுங்கி, அங்கும் இங்கும் ஓடி கொண்டும், வயர்களை பிடித்து தொங்கிய வண்ணம் தனது குரங்கு சேட்டையை அரங்கேற்றியது. 

முக்கிய அதிகாரிகள், நாடாளுமன்ற ஊறுப்பினர்கள், அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் அமரும் முக்கிய பகுதியை அங்கு பாதுகாப்புக்கு இருந்த அலுவலர்கள் மூடிய நிலையில் அரை மணிநேரம் அங்கும் இங்கும் அலைந்து அலப்பறையை கொடுத்த குரங்கு, கடைசியாக விஐபிக்கள் செல்லும், முக்கிய கதவு வழியாக வெளியேறியது.

கடந்த 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் கூட்டம் கூட்டமாக உலா வந்தன. அப்போது  குரங்குகளின் தொல்லை அதிகரித்துவிட்டதாக உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்களை தொடர்ந்து செயலகம் சுற்றறிக்கை அனுப்பியது. அதில் குரங்குகளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டாம், அதை தவிர்ப்பது நல்லது. குரங்குகளை கண்டதும் அச்சத்தில் ஓட வேண்டாம். அதன் மீது இரு சக்கர வாகனங்களை விட்டுவிட்டால், அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்று விடுங்கள். குரங்குகளை எந்த வகையிலும் வெறுப்பேற்றும் செயல்களில் ஈடுபட வேண்டாம். குரங்குகளை தனித்து இருக்க விடுங்கள், அப்போதுதான் அவை உங்களை தொந்தரவு செய்யாது. அவற்றை பொருட்படுத்தாமல் அமைதியாக கடந்து செல்லுங்கள் என்று அறிக்கை வெளியிட்டது செயலகம்.

இந்த நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புத்தம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழை நீர் ஒழுகும் காட்சிகள் வைரலானது. நாடாளுமன்ற லாபியில் நீர் கசிவு ஏற்பட்ட நிலையில் அங்கே பக்கெட் ஒன்றை வைத்தே மழை நீரை ஊழியர்கள் பிடித்தனர். நாடாளுமன்ற வளாகத்தை வெள்ளநீரும் சூழ்ந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் இது தொடர்பாக லோக்சபா செயலகம் விளக்கமளித்தது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நேற்றைய தினம் புகுந்த குரங்கு நாற்காலிகளில் புகுந்து அட்டகாசம் செய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் நாற்காலியில் அமர்ந்து சாவகாசமாக சுற்றும் குரங்கு ராஜா போல கம்பீரமாக உலா வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டின் போது ​​டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (என்டிஎம்சி) சிறிய குரங்குகளை பயமுறுத்துவதற்காக சாம்பல் லங்கூர் குரங்குகளை வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow