பிரபலங்களுக்கு உயர்ரக வாட்ச் பரிசளித்த ஆனந்த் அம்பானி.. விலையை கேட்டா மயங்கி விழுந்திடுவீங்க!

இந்தியா மட்டுமின்றி உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவுக்கு மொத்தம் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 14, 2024 - 11:20
Jul 14, 2024 - 11:24
 0
பிரபலங்களுக்கு உயர்ரக வாட்ச் பரிசளித்த ஆனந்த் அம்பானி.. விலையை கேட்டா மயங்கி விழுந்திடுவீங்க!
Anand Ambani Wedding

மும்பை: ஆசியாவின் பணக்கார தொழில் அதிபர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் என பன்முக முகம் கொண்டவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகனான ஆனந்த் அம்பானியின் மிக ஆடம்பரமான திருமணம்தான் இப்போது உலகளவில் பேசும்பொருளாகியுள்ளது.

அதாவது ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழில் அதிபரான வீரேன் மெர்ச்செண்டின் மகள் ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் கோலாகலமாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் பாலிவுட் திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழா நேற்று முன்தினம் மும்பையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் அதிகாரி லிண்டி கேமரூன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரர் ஜான்சீனா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சவுந்தர்யா என குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது ரஜினிகாந்த் மணமகன் ஆனந்த் அம்பானியோடு இணைந்து, ஹிந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டது இப்போது வரை டிரெண்ட் ஆக உள்ளது. 

மேலும் பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கான் அவரது மனைவி அவரது மனைவி கௌரி கான், ரிதேஷ் தேஷ்முக் அவரது ஜெனிலியா டிசோசா, விக்கி கௌசல் அவரது மனைவி காத்ரினா கைஃப்,  ரன்பீர் கபூர் தனது மனைவி ஆலியா பட் உள்பட ரன்வீர் சிங், அமிதாப்பச்சன், தமிழ்நாடு இயக்குநர் அட்லீ என திரையுலக பிரபலங்கள் அனைவரும் அம்பானி இல்ல விழாவில் பங்கேற்று ஆட்டம் போட்டனர்.

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஷிவாவுடன் விழாவில் கலந்துகொண்டார். மேலும் சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் பிரக்யன் ஓஜா, முன்னாள் இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்த்தனே, சூர்யகுமார் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் என பல்வேறு வீரர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இந்தியா மட்டுமின்றி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த  ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவில் மொத்தம் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி கோடி, கோடியாக பணத்தை இறைத்து நடத்தப்பட்ட திருமண விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை அம்பானி வெறும் கையோடு அனுப்பி விடுவாரா? 

தனது திருமண விழாவுக்கு வந்த ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்பட தனது பல்வேறு நண்பர்களுக்கு மணமகன் ஆனந்த் அம்பானி ரூ.2 கோடி மதிப்புடைய உயர்ரக வாட்ச்சுகளை பரிசளித்துள்ளார். அதாவது ஆனந்த் அம்பானியின் நெருங்கிய நண்பர்களான  ஷாருக்கான், ரன்வீர் சிங், ஷிகர் பஹாரியா, வீர் பஹாரியா உள்பட அனைவருக்கும் ரூ.2 கோடி மதிப்புள்ள ஆடெமர்ஸ் பிக்யூட் ( Audemars Piguet) நிறுவனத்தின் வாட்ச்கள் பரிசளிக்கப்பட்டுள்ள.

ஆடெமர்ஸ் பிக்யூட் வாட்ச்களை பெற்ற ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் அதுதொடர்பான வீடியோ, புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஆனந்த் அம்பானி பரிசளித்த ஆடெமர்ஸ் பிக்யூட் வாட்ச்களை பொறுத்தவரை 18கே இளஞ்சிவப்பு தங்க கேஸ், 9.5 மிமீ தடிமன், நீலக்கல் படிக பின்புறம் மற்றும் திருகு பூட்டப்பட்ட கிரீடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் கிராண்டே டேபிஸ்ஸரி பேட்டர்ன், நீல கவுண்டர்கள், பிங்க் கோல்ட் ஹவர் மார்க்கர்களுடன் கூடிய இளஞ்சிவப்பு தங்க நிற டயலைக் கொண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow