அம்பத்தி ராயுடு-யூசுப் பதான் சிக்ஸர் மழை... பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு அதிரடியில் வெளுத்து கட்டினார். 30 பந்தில் 5 பெளண்டரிகள் 2 சிக்கர்களுடன் 50 ரன்கள் விளாசிய அம்பத்தி ராயுடு சயீத் அஜ்மல் பந்தில் ஷர்ஜீல் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Jul 14, 2024 - 12:06
 0
அம்பத்தி ராயுடு-யூசுப் பதான் சிக்ஸர் மழை... பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
indian team won

லண்டன்: இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் 'உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024' டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 3ம் தேதி முதல் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணியும், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் நேற்று இறுதிப்போட்டியில் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 156 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் கம்ரன் அக்மல் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து நெகி பந்தில் ராயுடுவிடம் கேட்ச் ஆனார். ஒருபக்கம் ஷர்ஜீல் கான் (12 ரன்), சோஹைப் மக்சூத் (21 ரன்) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் ஷோயிப் மாலிக் 3 சிக்சர்களுடன் 36 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். 

கேப்டன் யூனிஸ் கான் 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கடைசில் சோஹைல் தன்வீர் 9 பந்தில் 19 ரன்கள் விளாச 156 என்ற சவாலான இலக்கை பாகிஸ்தான் அணி எட்டியது. இந்திய அணி தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பின்பு பேட்டிங் செய்த இந்தியா சாம்பியன்ஸ் அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. ராபின் உத்தப்பா (10 ரன்), சுரேஷ் ரெய்னா (4 ரன்) எடுத்து ஏமாற்றினார்கள். மறுபக்கம் முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு அதிரடியில் வெளுத்து கட்டினார். 30 பந்தில் 5 பெளண்டரிகள் 2 சிக்கர்களுடன் 50 ரன்கள் விளாசிய அம்பத்தி ராயுடு சயீத் அஜ்மல் பந்தில் ஷர்ஜீல் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் குர்கீரத் சிங் மான் 33 பந்தில் 34 ரன்கள் எடுத்தும், சிக்ஸர் மழை பொழிந்த யூசுப் பதான் 16 பந்தில் 3 சிக்சர்கள் 1 பெளண்டரியுடன் 30 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். கேப்டன் யுவராஜ் சிங் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் அடைந்த தோல்விக்கு இறுதிப்போட்டியில் இந்தியா பழிதீர்த்துள்ளது. அரைசதம் விளாசிய அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருது வென்றார். 41 வயதான யூசுப் பதான் தொடர் நாயகன் விருது வென்றார்.

இந்த வெற்றி குறித்து மகிழச்சி தெரிவித்த சுரேஷ் ரெய்னா, ''நாங்கள் இங்கேதான் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். இப்போது இங்கு உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளோம்.  கடவுள் கருணை காட்டியுள்ளார்'' என்று கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow