Nanguneri Issue : மாணவர்களுக்கு ரத்த வெறியா?.. தொடரும் சாதிய வன்மம்... ஒரே நாளில் 2 பேருக்கு வெட்டு

Students Attack in Nanguneri Issue : நெல்லையில் நேற்று ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. சக மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Aug 3, 2024 - 10:27
Aug 3, 2024 - 12:29
 0
Nanguneri Issue : மாணவர்களுக்கு ரத்த வெறியா?.. தொடரும் சாதிய வன்மம்... ஒரே நாளில் 2 பேருக்கு வெட்டு
Students Attack in Nanguneri Issue

Students Attack in Nanguneri Issue : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் உட்கோட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்திய கடற்படை வளாகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்பதாவது வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண தகராறில், அதே பள்ளியில் பயிலும் மற்றோரு மாணவர் ஒருவர் சிறிய ரக அரிவாளால் தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தி உள்ளார்.

மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவர், தனது சாப்பாடு பையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து விளையாட்டாக சக மாணவர் மீது தெளித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நாங்குநேரியை சேர்ந்த அந்த மாணவர், தனது வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாள் ஒன்றை எடுத்து வந்து தன் மீது தண்ணீரை சிந்திய சக மாணவரை தலையில் வெட்டிய பின்னர், அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

மேலும், இதில் காயமடைந்த மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கான காயங்கள் உள்ளதால், தற்போது நிலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதேபோல், நெல்லை மாநகர பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் 20 வயதான மாரி செல்வம் என்பவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டி உள்ளார். ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, கல்லூரி மாணவரை கல்லூரிக்குள் புகுந்து வெட்டிய இலங்காமணி (25), மீனாட்சி சுந்தரம் (19), மகாராஜா (23), தம்பான் (21), ராமசாமி (20) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றில் ஏற்படும் சாதாரண சம்பவங்களால் இது போன்ற வன்முறை நிகழ்வுகள்(Nanguneri Violence) திருநெல்வேலி(Nellai) மாவட்டத்தில் தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உறங்கிக் கொண்டிருந்த மாணவன் சின்னதுரை என்பவரை, அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவரையும், தடுக்கச் சென்ற அவரின் சகோதரியையும் வீடு புகுந்து அவரை அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வரும் நிகழ்வுகளை தடுத்திட தமிழக அரசுக்கு உரிய பரிந்துரைகள் அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தது.

அதில் உடனடியாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதிய மோதல்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என அறிக்கை வடிவமைக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெற்றியில் விபூதி குங்குமம் போன்றவை வைக்கக்கூடாது. கைகளில் வண்ண கயிறுகள் கட்டக்கூடாது. தற்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகளில், சாதிப் பெயர்கள் இடம் பெற்றிருப்பின் அவற்றை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், மீண்டும், மீண்டும் மாணவர்கள் தாக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவர்கள் படிக்கும்போதே, வன்முறைகளில் ஈடுபடும் நிகழ்வு, சக மாணவர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

சமூக நீதி, திராவிட மாடல் பேசும், ஆளும் திமுக அரசு இதுபோன்ற தாக்குதல்களுக்கு விரைவில் முடிவுகட்ட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் மாணவர்கள் இதுமாதிரியான வன்முறைகளுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சந்துரு அளித்துள்ள அறிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும், கல்வியாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow