சாமி சிலைகள் கடத்தல்.. ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது புகார்.. சிபிஐ விசாரணை

சிலை கடத்தல் விவகாரத்தில் விசாரணையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது கடந்த 2022 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Aug 10, 2024 - 12:33
 0
சாமி சிலைகள் கடத்தல்.. ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது புகார்.. சிபிஐ விசாரணை
Ponn Manikkavel cbi enquiry

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜ.யாக இருந்து ஓய்வு பெற்ற பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ விசாரணை மேற்கொண்டனர். சிலை கடத்தல் விவகாரத்தில் விசாரணையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது கடந்த 2022 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் பழவூர் கோவிலில் கடந்த 2005ஆம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயின. அதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் 2008 ஆம் ஆண்டு ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 பழங்கால சிலைகள் கிடைத்துள்ளன. 

கடந்த 2008 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் காதர் பாஷா, சுப்பராஜ் ஆகியோர் சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  சிலையை கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான  டிஎஸ்பியாக காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.முன்னதாக 2017ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் கடந்த 2007ம் ஆண்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் டி எஸ் பி காதர் பாஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் 2019 ஆம் ஆண்டு  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.அதில் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அவர் மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் காதர் பாட்ஷா குற்றம் சாட்டியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டிஜிபிக்கும் மனு அளித்ததாகவும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தன் புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த  நீதிபதி ஜெயச்சந்திரன்,ஓய்வுபெற்ற ஜஜி பொன் மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டுள்ளனர்.மேலும் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இதனை அடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு குற்ற பிரிவு ,கடந்த 2017 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா மற்றும் காவலர் சுப்புராஜ் மீது போடப்பட்ட வழக்கை அடிப்படையாக வைத்து சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டி ஐ ஜி  அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை விசாரணைக்கு நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அந்த அடிப்படையில் டி ஐ ஜி லவ்லி காட்டியார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் எதிராக குற்றம் சாட்டியுள்ளனர். இதில் உண்மை எது பொய் எது என தெரியவில்லை. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சிபிஐ விரிவாக விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் மற்றும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா இருவரில் யார் குற்றவாளிகள் என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் மற்றும் காதர் பாட்ஷா சுப்புராஜ் ஆகியோருக்கு சம்பந்தன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டனர். மேலும் தொடர்புடைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரையும் விசாரணை செய்ய உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.இதைத் தொடர்ந்து இன்று அவரது பாலவாக்கத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow