‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ - ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சனின் மனைவி மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் எந்தவிதமான பணபரிமாற்றமும் நிகழவில்லை என இயக்குனர் நெல்சனின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Aug 22, 2024 - 06:39
Aug 22, 2024 - 06:42
 0
‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ - ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சனின் மனைவி மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் கிருஷ்ணன் என்ற மொட்டை கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் அடிக்கடி போனில் பேசியதாக, பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியனர். வழக்கு ஒன்றிற்காக வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் செல்போனில் பேசியதாக மோனிஷா போலீசாரிடம் தகவல் அளித்தார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் சென்னை காவல்துறை அவுட் நோட்டீஸ் வழங்கியது. சம்போ செந்தில் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிங்கர்பூரில் 10 நாட்கள் தங்கியிருந்த கிருஷ்ணனை பிடிக்க தூதரக உதவியை நாடிய நிலையில் துபாய் தப்பியோட்டவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சவுதி அரேபியாவில் நண்பர்கள் உதவியோடு தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்டர்போல் உதவியை நாட உள்ளனர்.

மேலும், சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மொட்டை கிருஷ்ணன் மூலமாகவே அனைவரையும் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. சம்போ செந்தில், கிருஷ்ணன் மூலமாக ஹரிஹரன் உள்ளிட்டோர் மூலமாக மற்றவர்களை ஒன்றிணைத்தும் தெரியவந்துள்ளது.

ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவரது செல்போன் தொடர்பை வைத்து தனிப்படை போலீசார் இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக மொட்டை கிருஷ்ணன் வங்கி கணக்கில் 75 லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்திருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா வழக்கறிஞர் மூலமாக பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த ஏழாம் தேதி வழக்கறிஞர் கிருஷ்ணன் தொடர்பாக நெல்சனின் மனைவி மோனிஷாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டு போலீசார்  விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணையில் முழு விளக்கத்தை அளித்து விட்டு சென்றதாகவும் நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

தனது வங்கி கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை எனவும் அடிப்படை ஆதாரம் அற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோனிஷாவின் கணவர் இயக்குனர் நெல்சன் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான செய்தி பரப்பப்படுவதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும் ஊடகங்களையும் பிறரையும் கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணிக்கும் வகையில் வெளியிடப்படும் இத்தகைய பிரசுரங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் அத்தகைய செய்திகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். பின்பற்றாத பட்சத்தில், சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என நெல்சன் தரப்பு வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow