Shobita Dhulipala: “கவித கவித..” குறுந்தொகை வரிகளோடு காதல் கதை சொன்ன சோபிதா துலிபலா!
Shobita Dhulipala Engagement Photos wih Naga Chaitanya : நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சோபிதா துலிபலா, நாக சைதன்யா மீதான காதலை குறுந்தொகை பாடலுடன் கவிதையாக தெரிவித்துள்ளார்.
Shobita Dhulipala Engagement Photos wih Naga Chaitanya : டோலிவுட் முன்னணி நடிகரான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். சமந்தாவை காதல் திருமணம் செய்திருந்த நாக சைதன்யா, சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரை பிரிந்தார். இருவருமே முறைப்படி விவாகரத்துப் பெற்று தனியாக பிரிந்தனர். இதனையடுத்து நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபலாவுக்கும் இடையே காதல் என செய்திகள் வெளியாகின. ஆனாலும் இதுகுறித்து இருவருமே அமைதி காத்து வந்தனர். அதேநேரம் நாக சைதன்யாவும் சோபிதா துலிபலாவும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியிருந்தன.
இந்நிலையில், நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபலாவுக்கும் இரு தினங்களுக்கு முன்னர் நிச்சயம் நடந்தது. ஐதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதில் சோபிதா துலிபலாவின் குடும்பத்தினரும் பங்கேற்றதாக நாகர்ஜுனா தெரிவித்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் 8ம் தேதி காலை 9.42 மணிக்கு இருவருக்கும் நிச்சயம் நடைபெற்றது. இவர்களது திருமணம் இந்தாண்டு இறுதிக்குள் நடைபெறும் எனவும், அதனை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில், நாக சைதன்யாவுடனான நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சோபிதா துலிபலா. இருவரும் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் கறுப்பு வெள்ளை புகைப்படம், நாக சைதன்யாவுடன் கை கோர்த்தபடி ஒரு போட்டோ, வெட்கத்தில் வாயை பொத்தியபடி புன்னகைக்கும் போட்டோ என கலர்ஃபுல்லாக வைப் கொடுத்துள்ளார் சோபிதா துலிபலா. அதோடு குறுந்தொகையில் உள்ள பாடலையும் ஆங்கிலத்தில் ஷேர் செய்துள்ளார் அவர்.” யாயும் ஞாயும் யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி யறிதும், செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. - செம்புலப் பெயனீரார்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க - சூரியின் கொட்டுக்காளி முதல் விமர்சனம்
இந்நிலையில், நாக சைதன்யா - சோபிதா துலிபலாவின் திருமண தேதியை விரைவில் முடிவு செய்ய இரு குடும்பத்தினரும் பிளான் செய்து வருகின்றனர். எப்படியும் இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என்றே தெரிகிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்திருந்த சோபிதா, நைட் மேனேஜர் வெப் சீரிஸில் கவர்ச்சியில் கிறங்கடித்திருந்தார். சமந்தா கவர்ச்சியாக நடித்ததால் தான் நாக சைதன்யா அவரை பிரிந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், சமந்தாவை விடவும் சோபிதா துலிபலா கவர்ச்சியாக நடிப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனால் நாக சைதன்யா – சமந்தா பிரிவுக்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம் என நெட்டிசன்கள் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அது முடிந்துபோன கதை, நாக சைதன்யா, சமந்தா இருவருமே வாழ்வின் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுவிட்டனர். அதேபோல், சமந்தாவை பழிவாங்க தான், ஆகஸ்ட் 8ம் தேதி சோபிதா துலிபலாவுடன் நாக சைதன்யாவுக்கு நிச்சயம் நடந்தது என வெளியான செய்திகளும் வதந்தியே எனக் கூறப்படுகிறது. அன்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால் தான் நாக சைதன்யா – சோபிதா துலிபலா இருவருக்கும் நிச்சயம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?