அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6% குறைப்பு

Gold Rate Falls Today After Union Budget 2024 : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,550க்கும், ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Jul 23, 2024 - 16:07
Jul 23, 2024 - 16:49
 0
அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6% குறைப்பு
Gold Rate Falls Today After Union Budget 2024

Gold Rate Falls Today After Union Budget 2024 : பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6% குறைக்கப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,550க்கும், ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்பனையாகிறது.

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வரி குறைப்புகளை நிதியமைச்சர் அறிவித்தார். சில பொருட்களுக்கான வரி உயர்வையும் அறிவித்தார். 

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 6 சதவீதமாகவும், ப்ளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து அறிவித்தார். இதன் மூலம் தங்கம், வெள்ளியின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. கடந்த மே மாதத்தில் ஒரு சவரன் தங்கம் 55ஆயிரம் ரூபாயை எட்டியது. 

இந்த நிலையில் இன்றைய தினம்  தங்கத்தின் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதை அடுத்து  தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று காலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.2,080 குறைந்திருக்கிறது. அதேபோல் காலையில் கிராம் ரூ.8,810க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிராமுக்கு ரூ.260 குறைந்துள்ளது.   அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,550க்கும், ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்பனையாகிறது.ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 2000 ரூபாய் வரைக்கும் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow