Vishal: விஜய் மிஸ்ஸிங்..? கெளதம் மேனன் கூட்டணியில் விஷால்... க்ரீன் சிக்னல் கொடுத்த AR ரஹ்மான்!

Actor Vishal with Gautham Menon Movie : மலையாளத்தில் மம்முட்டி, சமந்தா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதனையடுத்து கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 23, 2024 - 22:17
Jul 23, 2024 - 22:56
 0
Vishal: விஜய் மிஸ்ஸிங்..? கெளதம் மேனன் கூட்டணியில் விஷால்... க்ரீன் சிக்னல் கொடுத்த AR ரஹ்மான்!
Actor Vishal with Gautham Menon Movie

Actor Vishal with Gautham Menon Movie : மின்னலே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள கெளதம், தற்போது நடிப்பில் பிஸியாகிவிட்டார். சொந்தமாக படம் தயாரித்து அதனால் பல கோடிகளை இழந்த கெளதம், அந்த கடன்களை அடைப்பதற்காக முழுநேர நடிகனாகிவிட்டார். கெளதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் இன்னும் ரிலீஸாகாமல் கிடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள கெளதம் மேனன், மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்துள்ளார். அதன்படி, மம்முட்டி, சமந்தா இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. மம்முட்டி – கெளதம் இணைந்துள்ள இத்திரைப்படம், எந்த மாதிரியான ஜானரில் உருவாகிறது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இதனிடையே கெளதம் மேனன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து சில முக்கியமான அப்டேட்கள் கிடைத்துள்ளன.

2012ம் ஆண்டு விஜய் ஹீரோவாக நடிக்க யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை இயக்கவிருந்தார் கெளதம் மேனன். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகவிருந்த இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. அதுமட்டும் இல்லாமல் யோஹன் அத்தியாயம் படத்தை 7 பாகங்களாக வெளியிடவும் கெளதம் மேனன் பிளான் செய்திருந்தார். ஆனால், இந்த மூவி மீண்டும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளராம். அதேபோல் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதான் விஜய் நடிக்கவிருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படமாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மம்முட்டி, சமந்தா கூட்டணியில் உருவாகும் படத்தை முடித்துவிட்டு விஷாலுடன் இணையவுள்ளார் கெளதம் மேனன். இதுகுறித்த அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும், அப்போது படத்தின் டைட்டில் உட்பட மற்ற அப்டேட்கள் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. மார்க் ஆண்டனி படம் மூலம் கம்பேக் கொடுத்த விஷால், ஹரியின் ரத்னம் படத்திலும் ஸ்கோர் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2ம் பாகத்தை விஷாலே இயக்கி நடித்து வருகிறார். ஆனாலும் இப்படத்தின் ஷூட்டிங் பற்றியோ அல்லது ரிலீஸ் தேதி குறித்தோ எந்த அப்டேட்டும் தெரியவில்லை. இந்நிலையில், விஷாலுடன் கெளதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது ஏற்கனவே ட்ராப்பான யோஹான் படமா அல்லது வேறு ஏதேனும் புதிய கதையா எனத் தெரியவில்லை. விஷாலின் ரத்னம் படத்தில் கெளதம் மேனன் கேமியோ ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow