சினிமா

AjithKumar: வேற லெவலில் மாஸ் காட்டும் அஜித்... குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி... Code Word புரியுதா?

குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பெயினில் நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள அஜித்தின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முக்கியமாக குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி குறித்தும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்துள்ளார்.

AjithKumar: வேற லெவலில் மாஸ் காட்டும் அஜித்... குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி... Code Word புரியுதா?
குட் பேட் அக்லி அஜித்தின் லுக்

 சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டே தொடங்கியது. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அஜர்பைஜான் நாட்டில் நடந்துள்ள நிலையில், தற்போது பேட்ச் ஒர்க், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும் முன்பே குட் பேட் அக்லி படத்தில் இணைந்தார் அஜித். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதனால் குட் பேட் அக்லி தரமான ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி ஷூட்டிங் தொடங்கும் முன்பே அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதில் பல வருடங்களுக்குப் பின்னர் செம மஜாவான ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார் அஜித். அதன்படி இந்தப் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் போதே, படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்திருந்தது படக்குழு.

அதன்படி அஜித்தின் குட் பேட் அக்லி, அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஆனால், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் கன்ஃபார்ம் ஆகவில்லை. இதனால் குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என சொல்லப்பட்டது. அதாவது விடாமுயற்சி பொங்கலுக்கும், குட் பேட் அக்லி அடுத்தாண்டு சம்மர் ஸ்பெஷலாகவும் ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகின. இதில் முக்கியமான விஷயமே லைகா தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியான இந்தியன் 2, வேட்டையன் படங்கள் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இதனால் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் லைகா தடுமாறி வருகிறதாம். 

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் கன்ஃபார்ம் செய்துள்ளது படக்குழு. ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் நடைபெற்றும் வரும் குட் பேட் அக்லி படப்பிடிப்பில், அஜித்குமார் பங்கேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அஜித்தின் செம ஸ்டைலான போட்டோவை ஷேர் செய்துள்ள அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா, அதில், குட் பேட் அக்லி பொங்கலுக்கு வெளியாகவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

அதேநேரம் அஜித்தின் குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ, அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், வெள்ளை நிற கோர்ட், சூட் அணிந்தபடி, தாறுமாறாக போஸ் கொடுத்துள்ளார் அஜித். அவரது இந்த போட்டோ ட்விட்டரில் படு வைரலாகி வருகிறது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷாவும், முக்கியமான கேரக்டர்களில் பிரபு, யோகி பாபு, சுனில் ஆகியோரும் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். குட் பேட் அக்லி பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளதால், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது இப்படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.