'மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள்'.. பிரகாஷ் ராஜ் கிண்டல் பதிவு.. எதுக்கு தெரியுமா?
Actor Prakash Raj Criticize on Union Budget 2024 : பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிப்பட்டுள்ளன என்று பொருள்படும் வகையில் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
Actor Prakash Raj Criticize on Union Budget 2024 : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகளை முன்னிலைப்படுத்தி பட்ஜெட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிதாக வேலையில் சேரும் இளைஞர்களுக்கு முதல் மாதம் ஊக்கத்தொகை, தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளன.
அதே வேளையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. மிக முக்கியமாக தமிழ்நாடு என்ற பெயரை கூட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களுக்கும் எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு தொடர்ந்து கண்டனம் வலுத்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த நெட்டின்சன்கள், ''பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பாக அடிக்கடி தமிழ்நாடு வந்து தமிழ் மொழியின் பெருமை, தமிழர்களின் கலாசாரம் குறித்து பேசினார். மேலும் தனது பேச்சில் திருக்குறளையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வந்தார். தமிழர்கள் மீது பிரதமர் மோடி அதிக பாசம் வைத்துள்ளார் என்று பாஜகவினர் கூறி வந்த நிலையில், இப்போது ஏன் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பட்டுள்ளது? பிரதமர் மோடி, பாஜகவினர் பேசியது எல்லாம் நாடகமா? '' என்று சமூகவலைத்தளத்தில் கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர்.
இதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, ''பாஜக அரசு தனது ஆட்சி அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை'' என்று கடுமையாக சாடினார். மேலும் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பாஜக கூட்டணி அரசை கிண்டல் செய்துள்ளார். தனது 'எக்ஸ்; பக்கத்தில் அல்வா படத்தை பகிர்ந்த அவர், ''ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள்'' என்று கூறியுள்ளார்.
அதாவது பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிப்பட்டுள்ளன என்று பொருள்படும் வகையில் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
What's Your Reaction?