பட்ஜெட் எதிரொலி.. 3வது நாளாக தங்கம் விலை சரிவு.. இல்லத்தரசிகள் படு ஹேப்பி

Gold Rate Today in Chennai : பட்ஜெட்டில் தங்கம்,வெள்ளி, பிளாட்டினம் நகைக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை மூன்றாவது நாளாக இன்றும் சரிவடைந்துள்ளதால் நகை வாங்கவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Jul 25, 2024 - 10:01
Jul 26, 2024 - 10:02
 0
பட்ஜெட் எதிரொலி.. 3வது நாளாக தங்கம் விலை சரிவு.. இல்லத்தரசிகள் படு ஹேப்பி
Gold Rate Today in Chennai

Gold Rate Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.480 குறைந்து  ரூ.51,440க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.6,430ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் தங்கம்,வெள்ளி, பிளாட்டினம் நகைக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவடைந்து வருகிறது.

கடந்த 2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15%ல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல்  பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%ல் இருந்து 6.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.  கடந்த திங்கட்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் 54,600 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ. 6,825 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

செவ்வாய்க்கிழமையன்று  காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து  ஒரு சவரன் தங்கம்  ரூ.54,480க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் ஒரு கிராம்  ரூ.6,810க்கு விற்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட பின்னர், நண்பகலுக்குப் பிறகு அதிரடியாக  தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. அதேபோல் கிராமுக்கு ரூ.260 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,550க்கும், ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்கப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் அதிரடியாக ரூ.3.10 குறைந்தது. அதன்படி  ஒரு கிராம் ரூ.92.50க்கு விற்பனை செய்யப்பட்டது. 

நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்தது. சவரனுக்கு ரூ.480 குறைந்து  ஒரு சவரன் ரூ.51,920க்கும், ஒரு கிராம் ரூ.6,490ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.  பட்ஜெட்டில் தங்கம்,வெள்ளி, பிளாட்டினம் நகைக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் மற்றும் 
வெள்ளி நகைகளின் விலை அடுத்தடுத்து சரிவடைந்து வருகிறது.

மூன்றாவது நாளாக இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து  ஒரு சவரன் ரூ.51,440க்கும், ஒரு கிராம் ரூ.6,430ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கத்தின் விலையானது 3,160 ரூபாய் குறைந்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 3040 குறைந்துள்ளது. பட்ஜெட்டில் தங்கம்,வெள்ளி, பிளாட்டினம் நகைக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இதுவே இந்தியாவில் தங்கம் விலை குறைய முக்கிய காரணங்கள் என தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நகை விலை குறைந்து வருவதால் ஆடி மாதம் என்றாலும் நகை வாங்க பெண்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதி வருகிறது. நகை விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow