கோட் பட தலைப்பில் சனாதனம்.. ரவிக்குமாருக்கு தமிழிசை பதிலடி.. ஆனந்த் சொன்னதை பாருங்க

தம்பி விஜய் மீதும் சனாதனத்தை போட்டுக் கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாஜகவின் முன்னாள் தலைவர் சனாதனம் என்பது என்ன என்பது ரவிக்குமாருக்கு தெரியவில்லை என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Sep 5, 2024 - 17:41
Sep 6, 2024 - 09:58
 0
கோட் பட தலைப்பில் சனாதனம்.. ரவிக்குமாருக்கு தமிழிசை பதிலடி.. ஆனந்த் சொன்னதை பாருங்க
goat movie does ravikumar know what sanadanam is asks tamilisai soundararajan

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்  கோட் வெளியாகி இருக்கிறது.

இந்த படம் பற்றி விசிக எம்.பி ரவிக்குமார் காலமெல்லாம் பெரியது இதுதான் என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 5) தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தி கோட்’ திரைப்படம் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் என்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விசிக எம்.பி. எழுப்பியுள்ள தலைப்பு தொடர்பான சர்ச்சை அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எங்களிடம் தான் சனாதனத்தை பார்த்தார்கள் என்றால் தற்பொழுது தம்பி விஜய் அவர்களிடமும் சனாதனத்தை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். முதலில் சனாதனம் என்றால் என்ன என்பது ரவிக்குமாருக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தம்பி விஜய் மீதும் சனாதனத்தை போட்டுக் கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாஜகவின் முன்னாள் தலைவர்  சனாதனம் என்பது என்ன என்பது ரவிக்குமாருக்கு தெரியவில்லை.காட்சியும் ரத்து செய்யப்படுகிறது கட்சியின் ரத்து செய்யப்படுகிறது என நான் கூறியதும் தற்பொழுது காட்சிக்கு அனுமதி வந்திருக்கிறது. எங்களுக்கு கோட் பிரச்சினை இல்லை ஓட்டுதான் பிரச்சனை என்றும் கூறியுள்ளார்.

கோட் படத்தின் தலைப்பு குறித்து விசிக எம்.பி ரவிக்குமாரின் விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள, விஜய்யின் த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow