GOAT வெற்றி விழாவுக்கு விஜய் வருவாரா?
சென்னை கமலா திரையரங்கில் தி கோட் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த நடிகர் அஜ்மல், இத்திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பங்கேற்பாரா இல்லையா என்பதை குறித்து பேசியுள்ளார்.
சென்னை கமலா திரையரங்கில் தி கோட் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த நடிகர் அஜ்மல், இத்திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பங்கேற்பாரா இல்லையா என்பதை குறித்து பேசியுள்ளார்.
கோட் திரைப்படம் இன்று வெளியான நிலையில், அதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களிலும் கோட் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் அதிகாலை 4 மணிக்கு கோட் படம் வெளியானது. சென்னை உட்பட தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள தமிழக ரசிகர்கள், அக்கட தேசங்களுக்கு பறந்துவிட்டனர்.
அதோடு கோட் 4 மணி FDFS பார்த்துவிட்டு படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் சென்னை ரசிகர்களுக்கு கோட் படக்குழுவினர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அதன்படி மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து கோட் திரைப்படம் பார்த்தார் த்ரிஷா. அவருடன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் படம் பார்க்கச் சென்றிருந்தார். த்ரிஷா, அர்ச்சனா கல்பாத்தி இருவரையும் தொடர்ந்து விஜய்யும் ரசிகர்களுடன் சேர்ந்து கோட் படம் பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தது.
சென்னை கமலா திரையரங்கில் கோட் படத்தின் காலை 9 மணி முதல் காட்சியை தொடங்கி வைத்த வெங்கட் பிரபு, புரொஜெக்டர் ரூமில் இருந்தபடி ரசிகர்களுடன் உரையாடினார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகினர். ஆனாலும் விஜய் தியேட்டர் வராமல் ஏமாற்றிவிட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். விரைவில் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கவுள்ள விஜய், கோட் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கலாம் எனவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விஜய்யுடன் அவரது குடும்பத்தினரும் கோட் படம் பார்த்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், மனைவி சங்கீதா மட்டும் மிஸ்ஸிங் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், THE GOAT திரைப்படத்திற்காக ஆடியோ லான்ச்-ம் நடைபெறவில்லை, புரமோஷன் பணிகளில் நடிகர் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதுவும் நடக்கவில்லை, ரசிகர்களுடன் சேர்ந்து கோட் திரைப்படமும் பார்க்கவில்லை என அடுக்கடுக்காக ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மேலும் படிக்க: 2026ல் விஜய் தான் முதலமைச்சர்... அடேங்கப்பா! கோட் படத்தில் இப்படியொரு குறியீடா..?
இந்நிலையில், ’தி கோட்’ திரைப்பட வெற்றி விழாவில் விஜய் கலந்துக்கொள்வார் என சென்னை கமலா திரையரங்கில் FDFS பார்க்க வந்த நடிகர் அஜ்மல் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் கோட் வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க வாய்ப்பு இருக்கிறது.
What's Your Reaction?