சினிமா

GOAT: 2026ல் விஜய் தான் முதலமைச்சர்... அடேங்கப்பா! கோட் படத்தில் இப்படியொரு குறியீடா..?

வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் படத்தில் விஜய்யின் கார் ரிஜிஸ்டர் நம்பர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. இது தான் விஜய்யின் அரசியல் குறியீடு என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

GOAT: 2026ல் விஜய் தான் முதலமைச்சர்... அடேங்கப்பா! கோட் படத்தில் இப்படியொரு குறியீடா..?
கோட் படத்தில் விஜய்யின் அரசியல்

சென்னை: விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான கோட் திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். ஹெச் வினோத் இயக்கவுள்ள அதுவே விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். அதேபோல், இந்த மாதம் தவெக முதல் மாநாடும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோட் படத்தில் விஜய் பயன்படுத்தியுள்ள கார் நம்பர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் அரசியல் ரீதியான காட்சிகளோ வசனங்களோ வைக்க வேண்டும் என விஜய் வறுபுத்தவில்லை என்பதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். படமும் அப்படியே வந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அதாவது கோட் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் மூவி என்றும், இது விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் கொண்டாடும் படம் எனவும் கூறியுள்ளனர். 

ஆனால், கோட் படத்தில் விஜய் பயன்படுத்தியுள்ள காரின் ரிஜிஸ்டர் நம்பர் TN 07 CM 2026. அதாவது 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் சிஎம் (முதலமைச்சர்) ஆவார் என்பதை குறிக்கும் விதமாக, கார் நம்பரை செலக்ட் செய்துள்ளாரா வெங்கட் பிரபு என கேள்விகள் எழுந்துள்ளன. அதேபோல், சிஎஸ்கே ஜெர்ஸியில் என்ட்ரியாகும் சிவகார்த்திகேயனிடம், ஒரு துப்பாக்கியை கொடுக்கும் விஜய். “கிரவுண்ட்ல இருக்கும் ஆயிரக்கணக்கானவங்களோட உயிர் இப்ப உங்க கைல தான்” என வசனம் பேசியுள்ளதும் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

இதற்கு சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள தக் லைஃப் தான் செம அல்டிமேட்டாக அமைந்துள்ளது. ”நீங்க இதவிட எதோ முக்கியமான வேலையா போறீங்கன்னு நினைக்கிறேன், நீங்க அத பாருங்க சார், நான் இத பாத்துக்கிறேன்” என சிவகார்த்திகேயன் பேசிய வசனமும் ரசிகர்களுக்கு செம கூஸ்பம்ஸ்ஸாக அமைந்துள்ளது. அதாவது, இந்த வசனம் விஜய் அரசியலுக்கு செல்லவிருப்பது குறித்தும், அதனால் இனி சினிமாவில் விஜய் இடத்திற்கு சிவகார்த்திகேயன் தான் என்பதை குறிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.  

கோட் படத்தில் நேரடியாக அரசியல் பேசாத விஜய்க்கு, வெங்கட் பிரபு வைத்துள்ள சர்ப்ரைஸ் ட்விஸ்ட் தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோட்-ஐ தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படமும் பக்கா கமர்சியல் ஜானரில் தான் உருவாகவுள்ளதாம். இதிலும் அரசியல் இருக்காது என இயக்குநர் ஹெச் வினோத் கூறியுள்ளார். ஆனால், கோட் படம் போல சில சர்ப்ரைஸ் சம்பவங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.