வீடியோ ஸ்டோரி

சாலைகளில் அட்ராசிட்டி செய்த விஜய் ரசிகர்கள் - ஆக்‌ஷன் எடுத்த போலீசார்

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சென்ற விஜய் ரசிகர்களிடம் இருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் அதை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் அனுமதியின்றி வாகனங்களில் விஜய்யின் ரசிகர்கள் தவெக கொடியுடன் ஊர்வலமாக பைக் மற்றும் கார்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றனர். இதையடுத்து கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் கொடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.