"அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி..அரசு பள்ளியில் NO இந்தி.." - எச். ராஜா கடும் தாக்கு

அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி படிக்கும் போது அரசு பள்ளியில் இந்தி கற்பிக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் எச். ராஜா.

Sep 5, 2024 - 23:31
Sep 6, 2024 - 15:28
 0
"அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி..அரசு பள்ளியில் NO இந்தி.." - எச். ராஜா கடும் தாக்கு
H Raja

அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி படிக்கும் போது அரசு பள்ளியில் இந்தி கற்பிக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் எச். ராஜா.

சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா, ”2017ல் ஜி.எஸ்.டி அமலானபோது மத்திய அரசு ஒரு புதிய வரியை அறிமுகம் செய்கிறது எனவும், அம்பானிக்கு எல்லாம் வரி இல்லை எனவும் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக பல தவறான கருத்துகளை பரப்பினர். 

பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிப்பதை தடுக்கவே ஜி.எஸ்.டி வரி கொண்டு வரப்பட்டது.
32 வரிகள் இருந்தன , அதை ஒரே வரியாக்கியதன் மூலம் தற்போது பொருள்களின் வரி குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகள் இடையே இடைவெளி இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், பல அரசு பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையுடன் செயல்படுகிறது , சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஒருவர் கூட சேரவில்லை. தமிழகத்தில் பல அரசுப்  பள்ளிகள் இடியும் நிலையில் உள்ளது , மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன” என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார்.

மேலும், ”மொழி பேதங்களை உருவாக்கும் பிற்போக்கு கொள்கையில்தான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. இந்தி அல்லது சமஸ்கிருதம் என்று இருந்த மூன்றாவது மொழியை ஏதாவது ஒரு  மொழி என மாற்றியது பாஜகதான்.

மேலும் படிக்க: GOAT வெற்றி விழாவுக்கு விஜய் வருவாரா?

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்து போட்டால் கண்டிப்பாக மத்திய அரசு நிதி கொடுக்கும். அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி படிக்கும் போது, அரசு பள்ளியில் இந்தி இருக்க கூடாதா? என கேள்வி எழுப்பினார்.

பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow