டிஜிட்டல் புரட்சி..ஊறுகாய் போடுவது தாழ்வானது இல்லை..நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நாட்டில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1.74 கோடியாக உள்ளது.114 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் 1.74 கோடி பேர் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்துவது குறைவாக தோணலாம். ஆனால் இது முன்பை விட அதிகம் என்பது தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Sep 5, 2024 - 16:54
Sep 6, 2024 - 09:58
 0
டிஜிட்டல் புரட்சி..ஊறுகாய்  போடுவது தாழ்வானது இல்லை..நிர்மலா சீதாராமன் பெருமிதம்
nirmala sitharaman

சமூக வலைதளங்களின் பங்களிப்பு இன்று அதிகரித்து வருகிறது , பொருளாதார நிபுணர்கள் பலரும் அதில் பேசுகின்றனர். ஆனால் 10 நபர்கள் சரியான தகவலை கூறுகின்றனர் என்றால் 100 நபர்கள் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர் , revenue bar association  போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் பொருளாதாரம் , முதலீடு குறித்து சரியான தகவலை பதிவு செய்ய வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் டிஜிட்டல் புரட்சியை கண்டு உலக நாடுகளே வியக்கிறது. AI தொழில்நுட்ப வளர்ச்சியை அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் வருவாய் வழக்கறிஞர்கள் சங்கம்  சார்பாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவர், அரசுக்கு வருவாய் ஈட்டுவது குறித்து திட்டங்களைக் கூட  பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் கடைசியாக தான் ஆலோசிக்கிரோம், வருமான வரி செலுத்துவோர் குறித்தும், வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறை எளிமைப்படுத்துவது குறித்து தான் முதலில் ஆலோசிக்கிறோம் என தெரிவித்தார்.

சமூக வலைதளங்களின் பங்களிப்பு இன்று அதிகரித்து வருகிறது , பொருளாதார நிபுணர்கள் பலரும் அதில் பேசுகின்றனர். ஆனால் 10 நபர்கள் சரியான தகவலை கூறுகின்றனர் என்றால் 100 நபர்கள் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர் , revenue bar association  போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள்  சமூக வலைதளங்களில் பொருளாதாரம் , முதலீடு குறித்து சரியான தகவலை பதிவு செய்ய வேண்டும் என்றார். 

நாட்டில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1.74 கோடியாக உள்ளது.114 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் 1.74 கோடி பேர் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்துவது குறைவாக தோணலாம். ஆனால் இது முன்பை விட அதிகம் என்பது தான்  புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் 
நேரடியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் 3.91 கோடியில் இருந்து 7.79 கோடி உயர்ந்து இருக்கிறது என கூறிய அவர், வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் இருக்கும் போதே அமெரிக்காவுக்கு நாம் எளிதில் பண பரிவர்த்தனை செய்ய முடியும். வங்கி கணக்கு இல்லாத 53 கோடி பேருக்கு கணக்கு தொடங்கியது மத்திய அரசு. AI தொழில்நுட்பம் வளர்ச்சியை நோக்கி இருக்கிறது. பல துறைகளுக்கு உதவியாக இருக்கும்  Revenue Bar Association அமைப்பில் இருப்பவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம் கடினமான விஷயத்தை தீர்க்க உதவும். மக்களிடமும் புரிய வைக்க வேண்டும் என தெரிவித்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகளின் கேள்விக்கு நிதியமைச்சர் பதில் அளித்தார். சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் இருக்கிறது. அங்கு தமிழ் மொழி, தமிழ் பண்பாடு குறித்து பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார். இதை சென்னையில் தெரிவிப்பது மகிழ்ச்சி என்றார். அதேபோல் டிஜிட்டல் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் இருந்து அமெரிக்கா வுக்கு இருக்கும் உறவுகளுக்கு உடனடியாக பணம் அனுப்பும் வகையில் வளர்ச்சி இருக்கிறது. ஆப்பிள் தொலைபேசி இல்லை என்றாலும்  டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் வளர்ச்சி தான் காரணம். 

மத்திய அரசு எடுக்கும்  முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம். டிஜிட்டல் புரட்சி தான் இன்று வளர்ச்சியின் அடையாளத்துக்கு ஒரு காரணம். அதேபோல் நான் ஊறுகாய் போட்டவர் என பேசுகின்றனர். ஆனால்  ஊறுகாய்  போடுவதும் தாழ்வானது இல்லை. மக்களுக்கு சேவை செய்வதிலும் தாழ்வாக தெரியவில்லை என்றனர். இப்படி விமர்சனம் செய்வது பற்றி கவலையில்லை என பேசினார். ஊறுகாய் போட்டவர் நிதி அமைச்சரா என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow