விஜயகாந்த் நினைவு தினம்... காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மலர்த்தூவி மரியாதை..!
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை தேமுதிகவினர் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவு இடத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கேப்டன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர். அவர் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறாரர். தமிழக சட்டபேரவையில் நானும் அண்ணன் விஜயகாந்த் அவர்களும் ஐந்து ஆண்டுகள் ஒன்றாக அமரந்து இருந்தோம். எப்போதும் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர். இயற்கையாக பேச கூடியவர். தமிழ் மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தவர். அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக நினைவேந்தலை தெரிவித்துக்கொள்கிறோம்.
தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதி சடங்கில் இருந்து நேராக வந்து இருக்கிறேன். காவல்துறை அனுமதி மறுத்து இருக்காது என நினைக்கிறேன். அது குறித்து தெரிந்த பிறகு சொல்கிறேன் என தெரிவித்தார்.
What's Your Reaction?