கிரெடிட் கார்ட் லிங்க் மூலம் மோசடி.. முதியவரிடம் லட்சக்கணக்கில் வடமாநில கும்பல் அபேஸ்

Reward Points Redeem Fraud Case : சென்னையில் கிரெடிட் கார்ட் ரிவார்ட் பாயிண்ட்டை பணமாக பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி பணத்தைப் பறித்த மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Sep 26, 2024 - 11:26
Sep 26, 2024 - 12:30
 0
கிரெடிட் கார்ட் லிங்க் மூலம் மோசடி.. முதியவரிடம் லட்சக்கணக்கில் வடமாநில கும்பல் அபேஸ்
கிரெடிட் கார்ட் மூலம் பணம் பறித்த மோசடி கும்பல் கைது

Reward Points Redeem Fraud Case : வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து சைபர் கிரைம் மோசடி என்பது விதவிதமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தும் போது கிடைக்கும் ரிவார்டு பாயிண்டுகளை சேர்த்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த ரிவாட் பாய்ண்டுகள் பயன்படுத்தி லிங்க்கை அனுப்பி சைபர் கிரைம் மோசடி கும்பல் பணத்தை வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து அபகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தேபேந்திரன் நாராயண்கர் என்ற 60 வயது முதியவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது செல்போனுக்கு கடந்த ஒரு குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்துள்ளார். அதில் உள்ள லிங்கில் "SBI YONO Reward points Rs. 9730 will expire today" என்று இருந்ததாக தெரிவித்துள்ளார். அதை உண்மை என நம்பி அந்த Link ஐ கிளிக் செய்து அதில் தனது வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்துள்ளார்.

பதிவு செய்த சில நேரத்திற்குப் பிறகு ரிவார்ட் பாயிண்ட் பணமாக   கிடைக்கும் என நம்பி இருந்த முதியவர் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை அடுத்தடுத்து எடுத்தவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து தேபேந்திரன் தான் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு கிழக்கு மண்டல கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு  விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வழக்கு சம்மந்தமான பயன்படுத்திய வங்கி கணக்கு ஆய்வு செய்த போது மேற்கு வங்கத்தில் அந்த வங்கிக் கணக்கு இருப்பது தெரிய வந்தது. அந்த வங்கிக் கணக்கானது பீரு சவுத்ரி என்பவருடையது தெரிய வந்துள்ளது. அதன்பின் அந்த வங்கிக் கணக்கில் உள்ள ஈமெயில் ஆகியவற்றை கண்டுபிடித்து ஐபி முகவரி மூலமாக விசாரணை மேற்கொண்டபோது அவரது சகோதரர் பிஜு சவுத்ரி இதுபோன்று பல வங்கி கணக்குகளை ஆரம்பித்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் சுரோனித் சென் என்ற தரகர் கூறியதால் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்ததாக இந்த சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் வெறும் பள்ளிப் படிப்பை மட்டும் முடித்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சைபர் கிரைம் மோசடி கும்பல் கைதானவர்களை மணிமியூலாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கு வங்கத்தில் இருந்த  பிரு சௌத்ரி பிஜு சௌத்ரி சகோதரர்கள் இருவரையும் மற்றும் தரகர் சுரோனித் சென், ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து வழக்கின் சொத்தான 3 செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து, விசாரணைக்குப் பின்னர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow