பெரியார் சிலை விவகாரம்... ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

Dec 1, 2024 - 15:58
Dec 1, 2024 - 15:59
 0
பெரியார் சிலை விவகாரம்... ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம்  நாளை தீர்ப்பு..!
ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு.

பெரியார் சிலை உடைப்பு கருத்து, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்தாக தமிழக  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு
எதிரான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும்  பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளித்தக்கபட்டது. இந்த புகாரில் 7 வழக்குகள் ஹெச். ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யபட்டது.

ஈரோடு நகர் காவல்துறை, கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில்  அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டது.  இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணை முடிக்க சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடைபெற்றது.பெரியார் சிலை உடைக்க வேண்டும்  ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும் எம்.பி. கனிமொழி மீதான கருத்து  அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எந்த ஆதாரங்கள் ஆவணங்கள் எதனையும் விசாரணை அதிகாரி மற்றும் புகார்தார் தாக்கல் செய்யவில்லை எனவே வழக்கின் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14 ம் தேதி தள்ளிவைத்த நீதிபதி ஜெயவேல் நாளை இந்த இரண்டு வழக்குகளில் தீர்ப்பளிக்கின்றார்.  நாளை காலை மூன்றாவது வழக்காக ராஜா வழக்கு தீர்ப்புக்கு பட்டியலிடபட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow