குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு உருட்டி விளையாடிய கொடூரம்..வீடியோ வெளியாகி அதிர்ச்சி
குழந்தை தொழிலாளர்களான சகோதரிகள் இருவர் தான் இந்த செயலில் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது.

தேனி நகராட்சிக்கு உட்பட்ட சிதம்பரனார் தெருவில் ஜெ.ஜெ.ப்ரோடிஜீஸ் என்ற பெயரில் தனியார் பகல் நேர குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.மேலும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையமாகவும் உள்ளது. இதனை ஜெனிபர் என்பவர் நிர்வகித்து வருகிறார்.தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை இங்கு வந்து விட்டுவிட்டு, மாலை நேரத்தில் வேலை முடிந்து திரும்பும்போது தங்கள் குழந்தைகளை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
குப்பைத்தொட்டியில் குழந்தை...
இங்குள்ள நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளை பராமரித்து வருகின்றனர்.இந்த நிலையில் சுமார் 1.5 வயது உள்ள குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு காப்பகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அந்தக் குழந்தையை கதற, கதற குப்பைத்தொட்டியுடன் உருட்டி விளையாடும் காட்சிகளும், மேலும் குப்பைத் தொட்டியை இரண்டு ஊழியர்கள் கையில் பிடித்து ஊஞ்சல் போல் ஆட்டும் காட்சிகள் மற்றும் குப்பை தொட்டியில் இருந்து குழந்தையை கீழே போடுவது போல பயமுறுத்தும் பதற வைக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: நகைப்பறிப்பு சம்பவம்.. என்கவுண்டர் செய்தது எதற்காக? காவல் ஆணையர் அருண் விளக்கம்
மேலும் இங்கு குழந்தைகளை பாதுகாக்கும் பணிகளில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள குழந்தை தொழிலாளர்களான சகோதரிகள் இருவர் தான் இந்த செயலில் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது.குழந்தையை துன்புறுத்தும் இது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளதால் இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு கோரிக்கை
அரசு அதிகாரிகள் இந்த பகல் நேர குழந்தைகள் காப்பகத்தை ஆய்வு செய்து, குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த காப்பகம் முறையான அனுமதி பெற்று செயல்படுகிறதா? விதிமீறல்கள் உள்ளதா? ஒரு குழந்தை மட்டும் இதுபோல துன்புறுத்தப்பட்டதா? அல்லது அனைத்து குழந்தைகளையும் இதுபோல துன்புறுத்துகிறார்களா என்று ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
What's Your Reaction?






