தமிழகத்தில் கொட்டப்படும் கேரள இறைச்சி கழிவுகள்... நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள்

இறைச்சி கழிவுகளால் தூர்நாற்றம் வீசி வருவதால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் வேறு விதமான நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Mar 26, 2025 - 20:10
Mar 27, 2025 - 14:13
 0
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள இறைச்சி கழிவுகள்... நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள்
கேரளாவில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகள்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய விவசாய பகுதி கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்யது வருவதோடு மட்டுமின்றி கால்நடைகளையும் அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். 

இறைச்சி கழிவுகள்

இந்நிலையில் திரிகூடபுரம் குடியிருப்பு பகுதியை ஒட்டி கேரளாவில் இருந்து கோழி மற்றும் பன்றி இறைச்சி கழிவுகளை வாகனம் மூலம் கொண்டு வந்து இந்த பகுதியில் உள்ள தனியார் நிலங்களில் கொட்டி விடுகின்றனர்.

Read more : ஷிஹான் ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம் - ஏராளமானோர் இறுதி மரியாதை

இந்த கழிவுகளில் இருந்து தூர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பல்வேறு விதமான நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 பொதுமக்கள் அவதி

மேலும் இந்த பகுதியில் கால்நடைகளை மேய்சலுக்கு கொண்டு  செல்ல முடியாத நிலைக்கு அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதோடு இல்லாமல் அவைகளுக்கும் நோய் தொற்று பரவும் நிலையும் உள்ளது.இந்நிலையில் இறைச்சி கழிவுகளை தின்று விட்டு செல்லும் நாய்கள் வெறிபிடித்து இதுவரை நான்கிற்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்று உள்ளது எனவும், இதே போன்று இந்த கழிவுகளை தின்றுவிட்டு மயில்களும் இறந்து கிடந்தாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Read more: தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29ல் திமுக ஆர்ப்பாட்டம்

இறைச்சி கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கிராமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow