Udhayanidhi Stalin Birthday : உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

Deputy CM Udhayanidhi Stalin Birthday : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு ஏறு தளுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான வீரர்களும், காளைகளும் பங்கேற்றனர்.

Feb 11, 2025 - 09:09
Feb 11, 2025 - 13:00
 0
Udhayanidhi Stalin Birthday : உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
ஜல்லிக்கட்டு போட்டி

Deputy CM Udhayanidhi Stalin Birthday: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏரு தளுவுதல் அரங்கத்தை கடந்த ஆண்டு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, அந்த அரங்கத்தில் ஒரு நாள் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு வழக்கம் போல் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், தற்போது கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பில் இன்றும் நாளையும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.  இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இதற்கு முன் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி, மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 12 ஆயிரத்து 632 காளைகளும், 5 ஆயிரத்து 347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்திருந்த நிலையில் இந்த போட்டிகளில் பங்கேற்காத காளைகளும், வீரர்களும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் களம் இறக்க உள்ளதாக அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கிழக்கு தொகுதி சார்பில் இன்றும் நாளையும் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் அவர்கள் களம் இறக்கப்படுகின்றனர். கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களமிறங்க உள்ளனர் 
மேலும் வெற்றி பெறும் காளை உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் சிறப்பான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து வருகின்ற 16-ஆம் தேதி சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow