"The Greatest Of All Time" என்பது எப்போதுமே எம்ஜிஆர் தான்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK Former Minister Jayakumar on The Greatest Of All Time : விஜய் படத்தின் டிக்கெட் 2000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதை கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசின் இயலாமை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

Sep 5, 2024 - 17:31
Sep 6, 2024 - 09:58
 0
"The Greatest Of All Time" என்பது எப்போதுமே எம்ஜிஆர் தான்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ADMK Former Minister Jayakumar on The Greatest Of All Time

விஜய் படத்தின் டிக்கெட் 2000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதை கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசின் இயலாமை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

ADMK Former Minister Jayakumar on The Greatest Of All Time : வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துறைமுகவளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியை எதிர்பார்க்காமல், தமிழக அரசு தேவையான நிதியை செலவழித்துவிட்டு பின்னர் மத்திய அரசிடம் நிதியை பெற்றுக் கொள்வது தான் சிறந்த நிர்வாகமாக இருக்க முடியும். ஆனால் மத்திய அரசை குறை சொல்லி நிதி இல்லை என்று சொல்லுவது ஏற்புடையது இல்லை.

இன்று வெளியாகியுள்ள விஜயின் ’தி கோட்’ திரைப்படத்தின் டிக்கெட் 2000 ரூபாய் வரை கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதை ஆளும் திமுக அரசு கட்டுப்படுத்த முடியாமல் தவறி இருப்பது அவர்களுடைய இயலாமையை வெளிப்படுத்தி இருக்கிறது.”

தொடர்ந்து பேசிய அவர், “தமிழக முதலமைச்சரின் தந்தையின் புகழை பாடுவதற்கு நிதியை செலவழிக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு நிதி ஆதாரம் இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பை கல்லூரிகளுக்கு சென்று படிக்காமலேயே பட்டம் பெரும் நிலையை  திமுக ஆட்சியில் உருவாக்கி இருக்கிறது.

திமுக கார்ப்பரேட் அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட வைத்த திமுக  அரசுக்கு ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு தகுதி இல்லை” என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார் .

அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படுகிறாரா அல்லது உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவராக செயல்படுகிறாரா என்பதே தெரியவில்லை. கோட் திரைப்படம் எந்த வகையில் சனாதனத்தை பிரதிபலிக்கிறது என்பதை விசிக எம்.பி. ரவிக்குமார் விளக்க வேண்டும். 

மேலும் படிக்க: டிஜிட்டல் புரட்சி..ஊறுகாய் போடுவது தாழ்வானது இல்லை..நிர்மலா சீதாராமன் பெருமிதம்

The Greatest of all time என்பது எப்போதுமே எம்ஜிஆர் தான். அதனால் வீண் விளம்பரத்திற்காக ரவிக்குமார் எதையும் பதிவிடாமல்,  எதற்காக அவ்வாறு ஒரு பதிவை பதிவிட்டார் என்பதை விளக்கினால் நாங்கள் பதில் அளிக்க தயார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow