Vijaya Nallathambi Arrest : முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது.. பண மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி நடவடிக்கை

Vijaya Nallathambi Arrest in Money Fraud : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

Oct 8, 2024 - 14:49
Oct 8, 2024 - 22:35
 0
Vijaya Nallathambi Arrest : முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது.. பண மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி நடவடிக்கை
முன்னாள் சபாநாயகர் சகோதரர் விஜய நல்லதம்பி கைது

Vijaya Nallathambi Arrest in Money Fraud : விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம், ராமுத்தேவன்பட்டியை சேர்ந்த முன்னாள் அதிமுக சபாநாயகர் காளிமுத்துவின் உடன் பிறந்த சகோதரரும், முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளருமான விஜய நல்லதம்பி 30 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

வேலை வாங்கி தராமலும் பணத்தையும் திருப்பி தராமல் 30 லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2022ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரவீந்திரன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டிய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள விஜய நல்ல தம்பியை அவரது வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow