GOAT 3rd song: 'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு..' DANCEல் மாஸ் காட்டும் விஜய்..யுவன் மேஜிக் இருக்கா?
'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு..' பாடலை கேட்பவர்கள் என்ன இந்த பாடலை எழுதியது கங்கை அமரனா? என்று ஒரு நிமிடம் உறைந்து போவார்கள். அதுவும் 'கரகாட்டகாரன்' படத்தின் பாடல் வரிகள் அனைத்தையும் கேட்டவர்கள், 90 கிட்ஸ்களின் பேவரிட் பாடலாசிரியரான கங்கை அமரனை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, வெளியாகும் படம் என்பதால் 'கோட்'டுக்கு பயங்கர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து 'விசில் போடு..', 'சின்ன சின்ன கண்கள்..' என இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. முதல் சிங்கிளான 'விசில் போடு' பாடல், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அடுத்து விஜய் – சினேகா நடிப்பில் ஃபேமிலி சென்டிமென்டல் மெலடியாக 'சின்ன சின்ன கண்கள்' பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து 'கோட்' படத்தின் மூன்றாவது பாடலுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இதுகுறித்து படக்குழு கடந்த 3 நாட்களாக அப்டேட் மேல் அப்டேட் கொடுத்து வந்தது. அதாவது மூன்றாவது பாடல் 3ம் தேதி (அதாவது இன்று) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்டேட் கொடுத்த படக்குழு இது தொடர்பான ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டு இருந்தது.
ஆனால் முந்தைய இரண்டு பாடல்கள்போல் 3வது பாடல் நன்றாக இருக்காது என்று ப்ரோமோ வீடியோவை வைத்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். ''ஆனால் இப்போதே ஏதும் சொல்லி விட முடியாது. பாடல் வெளியிடட்டும் அதன்பிறகு கருத்து சொல்கிறோம்'' என்று விஜய் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி 'கோட்' படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'கோட்' படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது 'எக்ஸ்' பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டுளார். யுவன் சங்கர் ராஜாவின் டிரேட் மார்க் பின்னணி இசையுடன் (BGM) 'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு..என் முன்னால நடந்தா கேட் வால்க்-கு'' என்ற வரியுடன் தொடங்கும் பாடல் 4.10 நிமிடங்கள் ஓடுகிறது. தெறிக்க விடும் குத்துப்பாடலான இதை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். கங்கை அமரன் இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
4.10 நிமிடங்கள் ஓடும் பாடலை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா மியூசிக் சிறப்பாக இருக்கிறது என்றாலும், வழக்கமான யுவனின் மேஜிக் இதில் கொஞ்சம் மிஸ் ஆனது போல் தெரிகிறது. தளபதி விஜய், மீனாட்சி செளத்ரியுடன் இணைந்து நடனமாடியுள்ளார். ஒரு 10 நொடிகள் விஜய் டான்ஸ் ஆடும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பார்ப்பதற்கு ஸ்மார்ட் ஆக இருக்கும் தளபதி விஜய், டான்ஸ் ஸ்டெப்பில் வழக்கம்போல் மெர்சல் காட்டியுள்ளார்.
பாடலின் வரிகளை பொறுத்தவரை hey swing it, hey feel it, hey touch it என்று ஆங்கில வார்த்தைகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. இந்த பாடலை கேட்கும்போது தமிழ் வரிகள் நம்மை பெரிதாக கவரவில்லை. 'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு..' பாடலை கேட்பவர்கள் என்ன இந்த பாடலை எழுதியது கங்கை அமரனா? என்று ஒரு நிமிடம் உறைந்து போவார்கள்.
அதுவும் 'கரகாட்டகாரன்' படத்தின் பாடல் வரிகள் அனைத்தையும் கேட்டவர்கள், 90 கிட்ஸ்களின் பேவரிட் பாடலாசிரியரான கங்கை அமரனை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று கண்டிப்பாக கேட்பார்கள். மொத்தத்தில் 'அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்..' பாடல் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. யூடியூப் தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.
What's Your Reaction?