Manu Bhaker : 3வது பதக்கத்தை நூலிழையில் தவறவிட்ட மனு பாக்கர்.. உருக்கமாக சொன்னது என்ன?..

Manu Bhaker Missing Medal at Paris Olympic 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் மகளிர் 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் மனு பாக்கர் நான்காம் இடத்தை பிடித்து பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பினை தவறவிட்டார்.

Aug 3, 2024 - 17:35
Aug 3, 2024 - 17:54
 0
Manu Bhaker : 3வது பதக்கத்தை நூலிழையில் தவறவிட்ட மனு பாக்கர்.. உருக்கமாக சொன்னது என்ன?..
நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட மனு பாக்கர்

Manu Bhaker Missing Medal at Paris Olympic 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். அதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான போட்டியில், மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மூன்றாக உயர்ந்தது.

8ஆவது நாளான நேற்று மகளிர்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் இஷா சிங் ஆகியோர் பங்கேற்றனர். தகுதிச் சுற்றுக்கான போட்டியில், துல்லியமாக செயல்பட்ட மனு பாக்கர் 600க்கு 590 புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மனு பாக்கர், நூலிழையில் வெற்றியை தவறவிட்டார். மனு பாக்கர் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே, சற்று தடுமாறினார். இறுதியில், கொரிய வீராங்கனை ஜின் யாங் 30 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், பிரான்ஸ் வீராங்கனை கேமிலே ஜெட்ர்ஜீவ்ஸ்கி 29 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், ஹங்கேரி வீராங்கனை வெரோனிகா மேஜர் மற்றும் மனு பாக்கர் ஆகியோர் 28 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆஃப் முறையில் ஹங்கேரி வீராங்கனை முன்னிலை பெற்று வெண்கலம் வென்றார். மனு பாகர் 4-ம் இடம் பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார். ஒருவேளை மனு பாக்கர் பதக்கம் வென்றிருந்தால், ஒலிம்பிக் போட்டி ஒன்றில் மூன்று பதக்கங்களை வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருப்பார். இதற்கு முன்னதாக, 1900ஆம் ஆண்டு நடைபெற்ற 200 மீட்டர் மற்றும் 300 மீட்டருக்கான தடை தாண்டும் பந்தயத்தில் நார்மன் பிரிட்சர்ட் வெள்ளிப் பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது.

பின்னர் தோல்வி குறித்து கூறிய மனு பாக்கர், “உண்மையிலேயே நான் மிகவும் பதட்டம் அடைந்தேன். ஆனால், அமைதியாக இருந்து, எனது சிறந்த பங்களிப்பை செலுத்த முயற்சித்தேன். இது போதுமானதாக இல்லை. இருப்பினும் அடுத்த வாய்ப்பு என்பது எப்போதும் இருக்கும். ஆகவே அடுத்த முறை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன்.

இரண்டு பதக்கங்கள் பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இறுதியாக தற்போது, நான் சிறப்பாக தொடரை முடிக்கவிலை. 4ஆவது இடம் என்பது சிறந்த இடமில்லை” என்று மன வருத்தத்தோடும், கவலையோடும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow