மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி முடிவு..  அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்

மெட்டா நிறுவனத்தில் நன்றாக வேலை செய்யாத மூன்றாயிரத்து 600 ஊழியர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய ஊழியர்களை பணியமர்த்த மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jan 15, 2025 - 17:02
 0
மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி முடிவு..  அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்
மார்க் ஜூக்கர்பெர்க்

ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால் பல நிறுவனங்களில் பலருக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மென்பொறியாளர்கள் துறைகளில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வருவதால் பல மென் பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  மார்க் ஜூக்கர்பெர்க் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதாவது, இந்த ஆண்டிற்குள் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகளில்  பணிப்புரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணி நீக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்கவும் மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார்.

மேலும் படிக்க: காவி உடை தரித்த திருவள்ளுவர்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.என்.ரவி

 பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடாக தலா 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 4.32 கோடி ரூபாய்) வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். செலவினத்தைக் குறைக்கும் வகையிலும், செய்யும் வேலையைத் துரிதப்படுத்தும் வகையிலும் இந்தப் பணிநீக்கம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும், மெட்டா நிறுவனத்தில் நன்றாக வேலை செய்யாத மூன்றாயிரத்து 600 ஊழியர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஊழியர்களை உள்ளே கொண்டு வருவதற்காகவும், அசாத்திய திறமைசாலிகளைக் கொண்ட நிறுவனமாக உருவாக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை மெட்டா நிறுவனம் 72 ஆயிரத்து 400 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது.

முன்னதாக கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் 21 ஆயிரம் பேரை மெட்டா வேலையைவிட்டு நீக்கியிருந்தது. அதாவது தனது நிறுவனத்தில் 25 சதவீதம் பேரை அப்போது பணியில் இருந்து நீக்கியது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்களின் வேலை செய்யும் விதம் அடிப்படையில் பணி நீக்கம் செய்வதை தொடர்ந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow